இடுகைகள்

பிட்ஸ் - ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகராதிகளை எப்படி தயாரிக்கிறார்கள்?

படம்
அகராதி –- பிட்ஸ்! புழக்கத்திலுள்ள ஒரு வார்த்தையை பல்வேறு சான்றுகளை பார்த்து பின்னரே அகராதியில் தயாரிப்புக்குழு சேர்க்கும். லெக்சிகோகிராபர் அதனை மக்கள் எந்த காலத்தில் என்ன அர்த்தத்தில் பயன்படுத்துகிறார் என்ற நோக்கில் ஆராய்வர். பின் அகராதியின் முதன்மை ஆசிரியர் குறிப்பிட்ட வார்த்தையை சேர்ப்பதை தீர்மானிப்பார். 16-17 ஆம் நூற்றாண்டுகளில் அகராதிகளில் எளிதான வார்த்தைகளை சலித்துதான் கண்டுபிடிக்கவேண்டும். அந்தளவு புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளை அகராதிக்குழு பயன்படுத்தியிருக்கும். மொழியியலாளர் ராபர்ட் காவ்ட்ரே லத்தீன், ஹீப்ரு உள்ளிட்ட மொழிகளிலிருந்து எடுத்த வார்த்தைகளை தொகுத்து A Table Alphabeticall என்ற அகராதியாக 1604 ஆம் ஆண்டு வெளியிட்டார். அமெரிக்க உச்சரிப்புடன் வெப்ஸ்டர் அகராதியை 1828 ஆம் ஆண்டு உருவாக்கிய நோவா வெப்ஸ்டர், இதற்கான சமஸ்கிருதம் உள்ளிட்ட 26 மொழிகளை கற்றார். 1843 ஆம் ஆண்டு வெப்ஸ்டர் இறந்தபின், ஜார்ஜ்- சார்லஸ் மரியம் என்ற சகோதரர்கள் அகராதி பதிப்பிக்கும் உரிமையை வாங்கி மரியம் – வெப்ஸ்டர் அகராதியை உருவாக்கினர். 1884 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வெளியிடப்பட்

எல்விஸ் பிரெஸ்லி சிக்னல்!

படம்
பிட்ஸ்! டான்ஸ் சிக்னல்! ஜெர்மனியிலுள்ள ஃபைட்பெர்க் நகரில் அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் சிக்னேச்சர் நடன ஸ்டைல்களில் போக்குவரத்து சிக்னல்களை அமைத்துள்ளனர். எல்விஸ் பிரெஸ்லி அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றிய 1958-60 காலத்தில் ஜெர்மனி வந்ததை நினைவுகூரும் வகையில் சிக்னல் விளக்குகள் அரசின் அனுமதி அமைக்கப்பட்டுள்ளன.இதற்கான செலவு ரூ.74 ஆயிரத்து 339 ஆகும். ஸ்டண்ட் சாதனை! ஸ்விட்சர்லாந்திலுள்ள எபிகோன் பகுதியிலுள்ள மால் ஒன்றில் ஃப்ரெடி நாக் என்ற சண்டை பயிற்சியாளர் அசாதாரண சாதனை செய்தார். கயிற்றில் நாற்காலியை செட் செய்து பேலன்ஸ் செய்து ஒன்றல்ல இரண்டல்ல எட்டரை மணிநேரம் தாக்குப்பிடித்து மக்களை வாய்பிளக்க வைத்துள்ளார். சாப்பிட்டுக்கொண்டும் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டும் ஃப்ரெடி இச்சாதனையை செய்துள்ளார். வணிக மாலின் முதலாமாண்டு கொண்டாண்டத்திற்காகவே இச்சாதனை. கைகளால் ஸ்கேட்டிங்! ஜெர்மனியின் பாக்ஹோல்ட் பகுதியைச் சேர்ந்த மிர்கோ ஹான்சென் கைகளில் ஸ்கேட்டிங் சக்கரங்களை பொருத்து 164 அடி பயணித்து 8.55 நிமிடங்கள் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனை செய்துள்ளார். “நான்கு ஆண்டுகள் செய்

காதை கடித்த போதை!

படம்
திறமை இல்லாததால் வேலை இல்லை! அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் துறையிலுள்ள டெலிகாம் மெசஞ்சர் பணிக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடக்க கல்வி தகுதி மட்டுமே தேவையான இப்பணிக்கு, 3,700 ஆராய்ச்சி மாணவர்கள், 28 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள், 58 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இது உ.பியின் எதார்த்த நிலை. நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று கூறினீர்களே? என லக்னோ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அரசு துறைகளிலுள்ள ஏராளமான வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான பட்டதாரிகள் கிடைப்பதில்லை” என்று தில்லாக   கூறினார். “உ.பியில் அரசின் செயலற்ற தன்மையை முதல்வர் மறைக்க பார்க்கிறார். படித்த இளைஞர்கள் பலரும் அரசின் எதிர்மறை போக்கினால் அவமானப்படுத்தப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர்” என்கிறார் காங்கிரஸ் தலைவரான எஸ்.ஜே.எஸ். மாக்கர். அரசு தேர்வுகளில் நடைபெறும் முறைகேடான கேள்வித்தாள் வெளியீடுகள் உ.பி அரசின் திறனற்ற செயல்பாடுகளை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. 2 ‘அந்த’ இடத்தில் ஆபத்து! சீனாவின் ஹைனன் பகுதியைச் சேர்ந

மதிப்பெண்ணை அள்ளி வழங்கிய ஆசிரியர்!

படம்
பிச்சை எடுக்கும் தடகள வீரர்! மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர், அரசு வேலை தராமல் புறக்கணித்ததால் தெருவில் பிச்சை எடுக்கும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளார். ம.பியைச் சேர்ந்த மன்மோகன்சிங் லோதி, மாற்றுத்திறனாளி தடகள வீரர். கடந்தாண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியின் நூறு மீட்டர் போட்டியில் ஓடி வெள்ளி வென்றுள்ளார். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் எனது வலது கையை இழந்துவிட்டேன். அரசு வேலை கிடைத்தால் எனது குடும்பத்தை காப்பாற்றமுடியும்” என மெல்லிய குரலில் பேசுகிறார் லோதி. அரசின் இரவுக்காப்பகங்களில் தங்கி அரசின் வேலைக்கு முயற்சித்தவர், முதல்வர் சிவராஜ்சிங் சௌகானை பலமுறை சந்தித்து மனுகொடுத்தும் வேலை கிடைக்கவில்லையாம். “எங்களுடைய துறை விதிப்படி லோதிக்கு வேலை தருவது இயலாத ஒன்று. சமூகநீதித்துறையில் அவர் முயற்சிக்கலாம்.” என்கிறார் விளையாட்டுத்துறையின் கூடுதல் இயக்குநர் வினோத் பிரதான். திறமைக்கு இதுதான் அங்கீகாரமா? 2 இஸ்‌ரோவின் 19 திட்டங்கள்! மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்‌ரோவின் லட்சியத்திற்கு தூரம் அதிகம். அடுத்து

சிறுவனைக் காப்பாற்றி கஜினி டெக்னிக்!

படம்
கைகொடுத்த இந்தியர்கள்! இந்திய அரசு கேரள மாநிலத்திற்கு ரூ.600 கோடி குறைந்த அளவு நிவாரணத்தொகையை அளித்தது. ஆனால் நாட்டின் பிற மாநில மக்கள் கையிலிருக்கும் தொகையை கேரளாவுக்கு அள்ளிவழங்கி இழப்புகளிலிருந்து காப்பாற்ற முயற்சித்து வருகிறார்கள். கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதுவரையில் ரூ.ஆயிரத்து 28 கோடி நிதி கிடைத்துள்ளது. கேரளா மீண்டும் புத்துயிர் பெற்றெழ 4.17 லட்சம் மக்கள் பங்களித்திருப்பது பெருமைக்குரிய செய்தி. வரைவோலை, பணமாக மட்டும் ரூ.835 கோடியும், டிஜிட்டல் பரிமாற்றம் வழியாக 146.52 கோடி ரூபாயும் நிவாரண நிதியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். சேதமதிப்பு 20 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகம் என்பதால் கேரள அரசு, பல்வேறு நாடுகளுக்கும் தம் அமைச்சர்களை அனுப்பி நிவாரண நிதியை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2 சகியா? சகோதரியா? காதலி மூலம் கைகளில் ராக்கி கயிறு கட்ட பள்ளி நிர்வாகம் நிர்பந்தப்படுத்த விரக்தியான காதலன் தற்கொலைக்கு முயற்சித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். திரிபுரா தலைநகரமான அகர்தலாவிலுள்ள பள்ளியில் திலீப்குமார் சாகா படித