இடுகைகள்

சூ வென் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருக்கலைப்புதான் சீரியல் கொலைக்கு காரணம் - சூ வென்

படம்
அசுரகுலம் சூ வென் இவரை சீனாவில் டாக்சி சாத்தான் என்கிறார்கள். துப்பினால் துடைச்சுக்குவேன் என பாட்டே பாடியாச்சு. இனி இவரை அசுரன் என்றால் என்ன ஆவக்காய் என்றால் என்ன? சீன மொழியில் கியா குவா என்று கூறிக்கொண்டு பிறரும் சென்றுவிடுவார்கள். 2003 ஆம் ஆண்டு ஜூலை தொடங்கி நவம்பர் வரை இவர் ஆறு பெண்களைக் கொன்றார். இரவில் மட்டும் விழிக்கும் சாத்தான் வென். இரவில் தன் காரில் ஏறும் பெண்களை இருள் சூழ்ந்த பக்கமாக கொண்டு சென்று, ம்ஹூம் நீங்கள் நினைக்கும் காட்சி கிடையாது. கயிறு வைத்து கழுத்தை இறுக்கி கொன்று உடலை கிணற்றில் அல்லது நகருக்கு வெளியே போட்டுவிட்டு அடுத்த சவாரி பார்ப்பது வென்னின் சாமர்த்தியம். இவருடன் காரில் மீட்டர் போட்டு வந்த பெண் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் அதனை உடம்பின் பசிக்காக செய்திருந்தால் கூட வென் மன்னிக்க வாய்ப்பிருக்கிறது. ஒண்ணுமே செய்யாத தன் கணவரைப் பழிவாங்க செய்ய நினைத்தார். அந்த பாடாவதி லட்சியத்தையும் வென்னிடம் காதல் மயக்கத்தில் சொல்லித்தொலைய ருத்ரனான வென் அடுத்த நொடி அப்பெண்ணின் கழுத்தை முறித்துக் கொன்றார். வென், கார்ப்பரேட் கம்பெனி ஓனர் போல. அனைத்தையும்