இடுகைகள்

கபே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு திரும்பி வந்து சுற்றுலாவை வளர்க்கும் இளைஞர்கள்!

படம்
            கிராமங்களில் வளரும் சுற்றுலா சீனாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமாக தனித்துவ கலாசார, உணவு, பண்பாட்டு தன்மை கொண்ட கிராமங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்க உலகமெங்கும் உள்ள பயணிகள் ஆர்வமாக வந்து குவிகின்றனர். இதை சீனாவில் வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோரும், இளைஞர்களும் ஊக்கப்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவை மேம்படுத்த சீன அரசும், உள்ளூர் நிர்வாகமும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள எட்டு கிராமங்களை சிறந்த சுற்றுலா கிராமங்கள் என சர்வதேச சுற்றுலா அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அமைப்பு, ஐ.நாவுடையது. எடுத்துக்காட்டாக ஷிதி கிராமத்தைப் பார்ப்போம். இந்த கிராமத்தில் பட்டுப்புழு வளர்ப்பு, தேயிலைப் பயிர் ஆகியவை முக்கியமான தொழில்கள். 1986ஆம் ஆண்டு, சுற்றுலா துறை மேம்பட்டது. கிராமத்தில் உள்ள வரலாற்று கட்டுமானங்கள், ஹூய்சூ கலாசாரம் ஆகியவை பிரசாரம் செய்யப்பட, உலக நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் சீனாவுக்கு வருகை தரத் தொடங்கினர். தொடக்கத்தில் உள்ளூர் மக்கள் சுற்றுலா வணிகத்தை கையாண்டாலும் பின்னாளில் 2013க்குப் பிறகு சுற்றுலாவுக்கென தனி ந...