இடுகைகள்

கான்க்ரீட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தில் உள்ள அரசுபள்ளிகளை பழுதுபார்க்க நிதி ஒதுக்க மறுக்கும் பிரதமர்!

படம்
  இங்கிலாந்தில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்க்க பணமின்றி தடுமாறி வருகின்றன. இந்த கட்டுமானங்கள் ராக் எனும் கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்டவை. இந்த வகை கான்க்ரீட் அதிக எடையில்லாதது என்பதால் கட்டுமான நிறுவனங்கள் இதை தேர்ந்தெடுத்தன. கான்க்ரீட் அதாவது சிமெண்டிற்கு காலாவதி நாள் உண்டு என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதை அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அங்கு பேசுபொருளாக உள்ளது. ராக் கான்க்ரீட் கலவை வீடுகளின் மேற்கூரை மாடிகள், சுவர்கள் கட்டப்பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும பிற கட்டுமானங்கள் அனைத்துமே ராக் கலவையால் கட்டப்பட்ட காலம் ஒன்றுண்டு. அதுதான் 1950 முதல் 1990கள் வரை. தேசிய தணிக்கை அலுவலகம், 196 ஆய்வறிக்கை அடிப்படையில் 65 பள்ளிகளில் இருபத்து நான்கு பள்ளிகளுக்கு உடனடியாக பழுதுபார்ப்பு அவசியம் என பரிந்துரைத்துள்ளது. கல்வித்துறை செய்த ஆய்வுகளில் ராக் கான்க்ரீட்டில் முழுமையாக கட்டப்பட்ட 572 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன என தெரியவந்துள்ளது. ராக் கலவைக்கான காலாவதி முப்பது ஆண்டுகள் ஆகும். இந்த வகையில் 38 சதவீத பள்ளிகள், அதாவது 24 ஆயிரம் பள்ளிகள் தங்கள்

சிமெண்ட், கான்க்ரீட் வேறுபாடு என்ன?

படம்
  சிமெண்ட் கால்சியம், சிலிகன், அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் கலவையே சிமெண்ட். இக்கலவையை  அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது,பாறையை ஒத்த கடினமான பொருளாகிறது. இதை அரைத்து பொடியாக்கினால், அதுதான் வீடுகட்டப் பயன்படுத்தும் சிமெண்ட்.சிமெண்டை முதலில் பயன்படுத்தியவர்கள், மாசிடோனியர்கள். பிறகு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு ரோமானியர்கள் பயன்படுத்தினர். இவர்கள் வேசிவியஸ் (Mount Vesuvius)எரிமலையில் கிடைத்த சாம்பலையும் , சுண்ணாம்புக்கல்லோடு கலந்து பயன்படுத்தினர். நாம் பயன்படுத்தும் சிமெண்டில் எரிமலை சாம்பலுக்கு பதிலாக நிலக்கரியை எரித்துப் பெறும் எரிசாம்பலைப் பயன்படுத்துகின்றனர்.   சுண்ணாம்புக்கல், வண்டல் மண் ஆகியவற்றை ஒன்றாக கலந்து போர்ட்லேண்ட் சிமெண்ட் என்பதை முதலில் உருவாக்கியவர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்ப்டின் (Joseph Aspdin). 1817இல் போர்ட்லேண்ட் சிமெண்டை உருவாக்கும் பரிசோதனைகளை செய்தார். அதில் வெற்றிகண்டவர், 1824ஆம் ஆண்டு தனது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பதிவு செய்தார்.  கான்க்ரீட் இதில் மணல், சரளைக்கற்கள், நீர் ஆகியவற்றோடு சிமெண்ட்டை கலக்கி பசைபோலாக்கினால்  அதன் பெயர்தான், கா

சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் இதுதாங்க வித்தியாசம்!

படம்
மிஸ்டர் ரோனி சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் என்ன வேறுபாடு? கட்டிடத்தில் பயன்படும் கலவையை நாம் கான்க்ரீட் என்றும் வீடு கட்ட கலப்பதை சிமெண்ட் என பாதிப்பேர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. கான்க்ரீட்டில் பகுதிப்பொருளாக கலக்கப்படுவதுதான் சிமெண்ட். சிமெண்ட் என்பது தனி. அதில் தேவைக்கேற்ப லைம்ஸ்டோன், களிமண், கிளிஞ்சல்கள் ஆகியவற்றை கலந்து தயாரிப்பதுதான் கான்க்ரீட். கலக்கப்பட்ட பொருட்களை 2642 டிகிரி வெப்பத்திற்கு சூடு செய்து அதனை குளிர்வித்து பாக்கெட்டுகளில் நிரப்பினால், கான்க்ரீட் ரெடி. உடனே இதனை எடுத்து கட்டிடங்களில் பூசி காய்ந்தால் உடனே குடி போய்விடலாமா என்று கேட்காதீர்கள். இதில் சிமெண்ட், மணல் கலவையை சரியாக கலக்கினால்தான் ரெடி டூ பேஸ்ட் பத த்திற்கு வந்து சேரும். வெறும் சிமெண்டை பூசினால் கட்டிடம் நிற்காது. அதற்கு சரிநிகராக அதில் மணல் இருப்பது அவசியம். நன்றி- மென்டல் ஃபிளாஸ்