இடுகைகள்

தானியங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுப் பழக்கத்தால் மாறும் வாழ்க்கை முறை!

படம்
  சமூக கலாசாரத்தைப் பாதிக்கும் உணவு!  ஆப்பிரிக்காவின்  சகாரா பகுதியில் வேவர் பறவைகளை (Weaver birds) வைத்து நடத்தை சூழலியல் ஆய்வு ஒன்றை செய்துள்ளனர். இந்தப் பறவையின் உணவு விதைகள், தானியங்கள்தான். வேவர் பறவையின் உணவுப்பழக்கம்,  பிற பறவைகளோடு இணைந்து வாழும் சமூக பழக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தானியங்களை உண்ணும் வேவர் பறவைகளோடு பூச்சிகளை உண்ணும் பிற பறவைகளை ஒப்பிட்டு இக்கருத்தைக் கூறியுள்ளனர். இதுபற்றிய பற்றிய ஆய்வுக்கட்டுரை, தி அமெரிக்கன் நேச்சுரலிஸ்ட் என்ற இதழில் வெளியாகியுள்ளது.  வேவர் பறவை, ப்ளோசிடே(Ploceidae,) எனும் இசைப்பறவை குடும்பத்தைச் சேர்ந்தது.  சகாரா ஆப்பிரிக்கப் பகுதியில் வாழும் வேவர் பறவை, திறந்தவெளியில் குழுவாக இணைந்து இரை தேடுகின்றன. ஒரே மரத்தில் குழுவாக கூடு கட்டி வாழ்கின்றன. இப்படி குழுவாக இருப்பதற்கு, வேவர் பறவையின் உணவுப்பழக்கம் முக்கியக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதே வேவர் இனத்தைச் சேர்ந்த சில பறவைகள் காட்டில் வசிக்கின்றன. ஆனால் அவை இரை தேடுவதையும், மரங்களில் கூடு கட்டுவதையும் தனியாகவே செய்கின்றன. இவை பூச்சிகளை உண்ண

உலக அமைதிக்கான நோபல் பரிசு! - வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்ட அமைப்புக்கு கிடைத்துள்ளது

படம்
        உலக அமைதிக்கான நோபல் பரிசை 28 ஆவது அமைப்பாக வேர்ல்ட் புட் புரோகிராம் எனும் ஐ.நாவின் திட்டம் வென்றுள்ளது. பசியைத் தீர்ப்பதற்காக போராடி, போர் மற்றும் முரண்பாடுகள் சிக்கல்களை நிலவும் பகுதியை அமைதி நிலவச் செய்த பணிக்காக நோபல் அமைதிப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1961ஆம்ஆ ண்டு அமெரிக்க அதிபர் வைட் ஐசன்ஹோவர், வேர்ல்ட் புட் புரோகிராம் திட்டத்தை தொடங்குவதற்கான ஆலோசனையை தெரிவித்தார். இந்த அமைப்பு தொடங்கியபிறகு ஈரானின் போயின் ஜாஹ்ரா நகரில் நடைபெற்ற நிலநடுக்க பாதிப்பில் 12 ஆயிரம் மக்கள் பலியாயினர். மேற்சொன்ன அமைப்பு அங்கு கோதுமை, சர்க்கரை, தேயிலை ஆகிய பொருட்களை டன் கணக்கில் அனுப்பி உதவியது. பின்னர், தாய்லாந்து, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் நிறைய உதவிகளை ஆபத்துகாலத்தில் செய்தது. 1963ஆம்ஆண்டு சூடானின் நியூபியன்ஸில் முதல் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியது. பின்னர், பள்ளிக்கான உணவு திட்டத்தை டோகோவில் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நாவின் முக்கியமான திட்டமாக வேர்ல்ட் புட் புரோகிராம் மாறியது. இத்தாலியின் ரோமில் இந்த திட்ட அமைப்பு செயல்படுகிறது. இதில் 36 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் இய