இடுகைகள்

ஜே டிராமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையான காதலை தவறான மனிதர்களிடம் தேடும் இருவரின் கதை!

படம்
  ஃபர்பெக்ட் கிரைம் - ஜே டிராமா பர்ஃபெக்ட் கிரைம் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி ஏடிபி என்ற கட்டிட உள் அலங்கார நிறுவனம் ஜப்பானில் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் டைரக்டர் தகாகுமா சானுக்கு, பிளானிங் பிரிவில் உள்ள மசிமா கவோரி என்ற இளம்பெண்ணோடு முறை தவறிய உறவு இருக்கிறது. அடிக்கடி உடலுறவு கொள்கிறார்கள். அவர்கள் அலுவலகத்திலும் இந்த செக்ஸ் உறவை சிலர் அறிந்திருக்கிறார்கள். டைரக்டருக்கு மணமாகியிருக்கிறது. அவரது மனைவி அவரை காதலிக்கிறார் . ஆனாலும் அவரது கணவர் மசிமாவின் இளமையான உடலுக்கு அடிமையாகி செக்ஸ் இன்பம் அனுபவித்து வருகிறார். மசிமாவுக்கு இந்த உறவு வெளியே தெரிந்தால் தனக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என நினைக்கிறாள்.   ஆனால் அதில் இருந்து அவளால் உண்மையாகவே வெளியே வர முடியவில்லை. அப்போது அமெரிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து சினோமோ சான் என்ற வடிவமைப்பாளர் வருகிறார். அவர், மசிமாவின் தகாத உறவை அறிந்து அதை துண்டித்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அந்த உறவை துண்டித்துக்கொண்டு சினோமோவுடன் அவள் காதல் கொள்கிறாள். இந்த உறவு நிலைத்ததா, உண்மையான காதலாக மாறியதா என்பதே இறுதிப்பகுதி.   தொடரின் இயக்கு

தீயசக்தி வாட்களை உருவாக்கும் குருவுடன் மோதும் சீடன்! தி சீலர்

படம்
  தி சீலர் - ஜே டிராமா தி சீலர் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி ஆப்   நகரில் சில மனிதர்கள் திடீரென ஒரு வாளால் தாக்கப்பட்டு   வீழ்கிறார்கள். அப்படி விழுந்து   எழுந்தால கையில் வாளின் கைபிடி உள்ளது. அதை கையில் இறுக்கிப்பிடித்தால் கருப்பு நிற புகை வெளிவரும் தீயசக்தி வாள் உருவாகிறது. அதை பயன்படுத்துபவரின் உருவம் சாதாரண மக்களின் கண்களுக்கு தெரியாது. இந்த வாள், வெறுப்பை, கசப்பை, வலியை, வேதனையை செரித்து வளர்கிறது மனதில நினைத்துப் பார்க்க முடியாத கோபத்தை, வலியை, பழிவாங்கும் வெறியை வைத்திருப்பவர்கள் இந்த தீய சக்தி வாளை பயன்படுத்தி தங்கள் வாழ்வைக் கெடுத்தவர்களைக் கொல்கிறார்கள். இதை தடுப்பவன்தான் காக்கேறு எனும் நாயகன். தி சீலர் தொடரின் பெரும் பலமே வாள் சண்டைக் காட்சிகள்தான். எதிரியிடம் வாள் இருக்கும். நாயகனிடம் வாளை மூடி உறையிடுவதற்கான வாளுறை மாத்திரமே உண்டு. அதை வைத்து அவர் எப்படி சண்டையிடுகிறார், எதிரிகளை வெல்கிறார் என்பதே கதை. தீயசக்தியை அடக்கும் இனக்குழு தொன்மைக்காலத்தில் இருந்து இருக்கிறது. இவர்கள், தனி இனக்குழுவாக சமூகத்தைக் காக்க அமைதியாக இயங்கி வருகிறார்கள். காக்கேறு, தீயசக்தி வாள

ஜோம்பிகளுக்குத் தப்பி மாலில் வாழும் ஆறு மனிதர்கள்!

படம்
  வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட் - ஜே டிராமா வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட்   ஜே டிராமா   ஜோம்பிக்களின் கதை. ஜப்பானில் நாடே ஜோம்பி வைரஸ் பரவி பிரச்னையாக உள்ளது. எம் மால் என்ற கட்டிடத்தில் எட்டு பேர் இருக்கிறார்கள். அவர்களின் கட்டிடத்திற்கு அருகில் ரிரிசான் என்ற இளம் மாணவி மயக்கமடைந்து விழுகிறாள். அதைப் பார்க்கும் ஒருவர், மொட்டை மாடியில் இருந்து அந்த மாணவியை மீட்கிறார். மாணவி ரிரிசான் கண் விழிக்கும்போது குழு தலைவர், சமையல் பெண்மணி, யூட்யூப் வீடியோ எடுக்கும் இளம்பெண், தரையை துடைக்கும் வேலையை செய்பவர், உடற்பயிற்சி செய்யும் இளைஞர், மாடல் பெண்மணி   என பலரையும் பார்க்கிறாள். இவர்கள் ஷாப்பிங் மாலுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.   அங்குள்ள உடை, எலக்ட்ரானிக்ஸ், உணவு, மளிகைப்பொருட்கள் , அழகு சாதனம் என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். உதவி வேண்டி மொட்டை மாடியில் சில ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனாலும் கூட அது பயனளிக்கவில்லை. இதற்கு இடையில் மனிதர்களுக்கு   அன்பு, காதல், நட்பு உருவாகிறது. அதுவே சண்டை, பழிக்குப்பழி என பலதையும் ஏற்படுத்துகிறது. தொடரை சற்று காமெடியாக எடுக்க முனைந்திர

'காதல் போதும்' - காதலன், 'செக்ஸ் அவசியம்' - காதலி! மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா

படம்
  மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் மை   ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் ஜப்பான் டிவி தொடர் ஜே டிராமா 9 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   தலைப்பில் தெரிகிறது அல்லவா…. அதுதான் கான்செஃப்ட். செக்ஸ் காமெடியை மையப்பொருளாக கொண்ட தொடர். ஷேர்ட் கோ வொர்க்கிங் பிளேஸ் அங்கு நிறையப் பேர் வேலை செய்கிறார்கள். கலைப்பொருட்களை ஆன்லைன் வழியாக வாடகைக்கு கொடுக்கும் நிறுவனத்தில் நாயகி, அவளது கல்லூரி கால தோழி, நண்பன் ஆகியோர் வேலை செய்கிறார்கள். அது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். கல்லூரித் தோழி கேட்டுக்கொண்டதற்காக இந்த தொழிலுக்கு நாயகி வருகிறாள். மொத்தம் இரு பெண்கள், ஒரு ஆண் என மூவர் வேலை செய்யும் நிறுவனம். கோ வொர்க்கிங் ஸ்பேஸில் பொருட்களை புகைப்படம் எடுத்து அதை சந்தைப்படுத்தும் தொழிலில் உள்ள மூவரை, சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் புகைப்படக்கலைஞன் அழகாக கூடவே அமைதியாக இருக்கிறான். அவனுக்கும் சேர்த்து புறவயமான இயல்பு கொண்ட   நாயகியே பேசுகிறாள். தொழில்ரீதியாக நாயகியின் தோழி புகைப்படக்கலைஞன், சுயாதீனக் கலைஞன் என்பதால் அவனை தனது தொழிலுக்கு பயன்படுத்துகிறாள். இப்படித்தான் நாயகி

காது கேட்காத மாற்றுத்திறனாளியை காதலிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை! - சைலன்ட் - ஜப்பான்

படம்
  சைலன்ட் டிவி தொடர் ஜப்பான் - ஜே டிராமா  ராகுட்டன் விக்கி ஆப்   பள்ளிப்பருவ காதல்கதை. பள்ளிப்பருவத்தில் உற்சாகமாக தொடங்கும் காதல்,   பின்னாளில் காதலனின் உடல்நலப் பிரச்னையால் பிரிந்து மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தொடங்குகிறது. அவர்களின் காதல் மீண்டும் தொடங்கியதா, ஒன்று சேர்ந்ததா என்பதே கதை. ஒரு எபிசோட் ஒரு மணிநேரம் என மொத்தம் பதினொரு எபிசோடுகள் உள்ளன. காசு கட்டினால் விளம்பரத்தொல்லையின்றி பார்க்கலாம். இல்லையென்றால் விளம்பரத்தைப் பார்க்கவும் ஏராளமான டேட்டா செலவாகும். சௌக்கு என்ற சகுரா, பள்ளியில் படிக்கிறார். இவரை மினாட்டோ என்ற மாணவர் ஆவோவா என்ற தனது தோழிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்கு சகுராவைப் பார்த்த உடனே காதல் தோன்றிவிடுகிறது. சகுராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.   எப்போதும் பாப் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்கு ஸ்பிட்ஸ் எனும் இசைக்குழுவின் பாடல்கள் இஷ்டம். அதுவரை அப்படி பாடல்கள் கேட்காத ஆவோவா மெல்ல இசையின் வசமாகிறாள். சௌக்குவிடம் இரவல் வாங்கும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தனது படிப்பைத் தொடர்கிறாள். வகுப்பறையில் வெளியில் என சகுராவும் ஆவோவாவும