இடுகைகள்

குணசேகர் சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்கம் செத்துவிட்டது - மிருகராஜூ - சிரஞ்சீவி, சிம்ரன், பிரம்மானந்தம், நாகபாபு

படம்
                   மிருகராஜூ இயக்கம் குணசேகர் படத்தின் கதை எங்கே நடக்கிறது என்று கேட்டுவிடக்கூடாது ஏதோ ஒரு கிரகத்தில் நடைபெறுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இந்த படத்திற்கும் நமக்கும் மஞ்சிதி... பழங்குடிகள் வாழும் காடு. அங்கு ரயில் செல்வதற்கான இருப்புபாதை கொண்ட பாலம் ஒன்றைக் கட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் சிங்கத்தால் கட்டுமான பொறியாளர் கொல்லப்படுகிறார். இதனால் புதிதாக அங்கு பெண் பொறியாளர் வருகிறார். ஆனால் அவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை. ஆட்கொல்லியாக மாறிவிட்ட சிங்கம்தான். எத்தனை தான் இருக்கிறது என தெரியாமலேயே வேட்டையாடுவேன் என பெண் பொறியாளர் சொல்லுகிறார். ஆனால் பழங்குடி தலைவர் காட்டுக்குள் உள்ள ராஜூ என்ற பழங்குடி ஆளை சிங்கத்தை வேட்டையாட கூட்டி வருகிறார். அவருக்கும் பெண் பொறியாளருக்கும் உள்ள தொடர்பு என்ன, சிங்கத்தை வேட்டையாடினார்களா இல்லையா என்பதே கதை. படத்தில் சிரஞ்சீவியை விட அதிக காட்சிகளில் கிராபிக்ஸ் சிங்கம் ஒன்றுதான் நடமாடுகிறது. ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. பழங்குடிகள் சிங்கத்தின் மூலம் கொல்லப்படுவதை தடுக்க ராஜூ எடுக்கும் முயற்சிகள் என்பது ஒரு கதை. அடுத