இடுகைகள்

மூலக்கூறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளை அறிந்து உலகிற்கு சொன்னவர்! - ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின்

படம்
  ரோஸாலிண்ட் ஃபிராங்கிளின் (1920-1958) இங்கிலாந்தின், லண்டன் நகரில் பிறந்தார். பெற்றோர் எல்லிஸ் ஆர்தர் ஃபிராங்கிளின், முரியல் ஃபிரான்சஸ் வாலே.பள்ளியில் படிக்கும்போதே அறிவியல் படிப்பில் ஆர்வம் காட்டினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்காம் கல்லூரியில், இயற்கை அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர், 1941ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றவர்,  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று எக்ஸ்ரே கதிர்கள்(xray diffraction) பற்றி படித்து வல்லுநரானார்.  1951ஆம் ஆண்டு லண்டனில் கிங் கல்லூரியில் இருந்த ஆராய்ச்சிக் குழுவோடு இணைந்து எக்ஸ்ரேவைப் பயன்படுத்தி டிஎன்ஏவை 3டி வடிவத்தில் உருவாக்க முயன்றார். இதற்கு ரோஸாவின் மாணவர் எடுத்த போட்டோகிராப் 51 முக்கியமான ஆதாரமாக உள்ளது. 1953ஆம் ஆண்டு புகையிலை மொசைக் வைரஸின் ஆர்என்ஏ அமைப்பை பற்றி ஆராயத் தொடங்கினார். இந்த செயல்பாடுதான், வைரஸ்களைப் பற்றிய அமைப்பு பற்றி அறிவதற்கு உதவியது. டிஎன்ஏவிலுள்ள மூலக்கூறுகளைப் பற்றி அறிவதற்கு ரோஸாலிண்ட் செய்த ஆராய்ச்சிகள் உதவின. https://en.wikipedia.org/wiki/Rosalind_Franklin

ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த திரவ வடிவிலான கண்ணாடி! - புதிய நீள்வட்ட வடிவிலான மூலக்கூறுகள் கொண்ட பொருள்

படம்
                ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த திரவ வடிவிலான கண்ணாடி ! ஜெர்மனி , நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்பி எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரவ வடிவிலான கண்ணாடியை கண்டறிந்திருக்கிறார்கள் . கண்ணாடி என்பது உறுதியாக இருந்தாலும் அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறியவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன . நீள்வட்ட கூழ்மமான இதிலுள்ள துகள்கள் அலைந்தபடி உள்ளன . குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ப்ரீசரில் உறைதல் எப்படி நடக்கிறது என கவனித்திருக்கிறீர்களா ? பிளாஸ்டிக் தட்டில் உறைதல் என்பது குறிப்பிட்ட வரிசைப்படி நடைபெறும் . நடுவிலிருந்து ஐஸ்ட்ரே உறையத்தொடங்கும் . ஆனால் கண்ணாடி கிரிஸ்டல் வடிவில் அமைந்தது அல்ல . இதன் காரணமாக கண்ணாடி திரவ வடிவிலிருந்து திட வடிவிற்கு மாறும்போது செயல்பாடுகள் வரிசைப்படியாக நடைபெறுவதில்லை . எனவே , கண்ணாடி பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் . ஜெர்மனியைச் சேர்ந்த கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான வேதிக்கலவையை உருவாக்கி சோதித்து திரவ வடிவிலான கண்ணாடியை அடையாளம்

வாசனை காணாமல் போகிறதா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நாம் மூக்கிற்கு வரும் வாசனை என்னாகிறது? நாம் சாக்லெட் பர்ப்யூம் அணிந்த அழகியைச் சந்திக்கிறோம். அவர் நம்மிடம் பேசிவிட்டு சென்றவுடன் சில நிமிடங்களில் அந்த வாசனை அழிந்துவிடுகிறது. நினைவில் மட்டும் அந்த வாசனை நீடித்திருக்கும். அதற்கு வேறு காரணங்கள் கூட இருக்கலாம். மூக்கின் நுகர்வு எல்லைக்கு, அந்த வாசனை தட்டுப்படாத தற்கு, வாசனை மூலக்கூறுகள் காற்றிலிருந்து அழிந்துபோனதே காரணம். அழுகிய முட்டை, சல்பைடு தன்மை கொண்டது என்பதால் காற்றுடன் வினைபுரிந்து தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. அனைத்து வாசனைகளும், அதன் மூலக்கூறுகளும் இப்படியானவை அல்ல. நன்றி- சயின்ஸ் ஃபோகஸ்