ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த திரவ வடிவிலான கண்ணாடி! - புதிய நீள்வட்ட வடிவிலான மூலக்கூறுகள் கொண்ட பொருள்
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த திரவ வடிவிலான கண்ணாடி!
ஜெர்மனி, நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் கான்ஃபோகல் மைக்ரோஸ்கோப்பி எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திரவ வடிவிலான கண்ணாடியை கண்டறிந்திருக்கிறார்கள். கண்ணாடி என்பது உறுதியாக இருந்தாலும் அதன் அமைப்பு பற்றி விஞ்ஞானிகள் அறியவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. நீள்வட்ட கூழ்மமான இதிலுள்ள துகள்கள் அலைந்தபடி உள்ளன.
குளிர்சாதனப்பெட்டியில் உள்ள ப்ரீசரில் உறைதல் எப்படி நடக்கிறது என கவனித்திருக்கிறீர்களா? பிளாஸ்டிக் தட்டில் உறைதல் என்பது குறிப்பிட்ட வரிசைப்படி நடைபெறும். நடுவிலிருந்து ஐஸ்ட்ரே உறையத்தொடங்கும். ஆனால் கண்ணாடி கிரிஸ்டல் வடிவில் அமைந்தது அல்ல. இதன் காரணமாக கண்ணாடி திரவ வடிவிலிருந்து திட வடிவிற்கு மாறும்போது செயல்பாடுகள் வரிசைப்படியாக நடைபெறுவதில்லை. எனவே, கண்ணாடி பற்றி அறிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜெர்மனியைச் சேர்ந்த கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான வேதிக்கலவையை உருவாக்கி சோதித்து திரவ வடிவிலான கண்ணாடியை அடையாளம் கண்டுள்ளனர். திரவ வடிவிலான கண்ணாடியின் மூலக்கூறுகளின் அமைப்பு, அதன் அமைப்பு காரணமாக அதன் செயல்பாடு எப்படி மாறுகிறது என ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்துவருகிறார்கள்.
தினசரி நாம் பயன்படுத்தும் ஷாம்பூ, புகை, தூசி ஆகியவற்றில் மூலக்கூறுகள் நிலையானவையல்ல. நகர்ந்துகொண்டேயிருக்கும். அதேபோல, திரவ வடிவிலான கண்ணாடியிலும் மூலக்கூறுகளின் வடிவம் நீள்வட்டமாக இருப்பதோடு அவை அலைவுறும் தன்மை கொண்டவையாக உள்ளன. ”கோட்பாட்டுரீதியாக திரவ வடிவிலான கண்ணாடி என்பது ஆராயப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மூலம் இதன் மூலக்கூறுகளின் தன்மை எப்படிப்பட்டவை என அறியலாம். உயிரியல் முதல் வானியல் வரையிலான துறைகளுக்கு இந்த ஆராய்ச்சி உதவும்” என்கிறார் ஜெர்மனி ஆராய்ச்சியாளரான மதியாஸ் ஃப்யூச். திரவ கண்ணாடி அமைப்பை 3டி வடிவில் படம்பிடித்து ஆராய்ந்து வருவதோடு, சாதாரண, சமநிலை அற்ற மூலக்கூறுகளை கொண்ட கண்ணாடி பொருட்களையும் ஆய்வாளர்கள் சோதித்து வருகி்ன்றனர்.
https://www.popularmechanics.com/science/a35132726/new-state-of-matter-liquid-glass/#
http://www.sci-news.com/physics/liquid-glass-09222.html
நீ எழுதியது இயற்பியல் கட்டுரை என்று சொல்லிவிடாதே என இதழ் ஆசிரியர் நிராகரித்த இயற்பியல் கட்டுரை.
கருத்துகள்
கருத்துரையிடுக