மதச்சார்பற்ற தன்மையை மூலம் ஜனநாயகத்தை உருவாக்கிய நேரு, காந்தி மீது எனக்கு மரியாதை உண்டு! எழுத்தாளர் ஃபரீத் ஜக்காரியா
எழுத்தாளர் ஃபரீத் ஜக்காரியா
மேற்குலக நாடுகள் இனி ஆதிக்கம் செலுத்த முடியாதா? பிற நாடுகள் அந்த இடத்திற்கு நகருமா?
35 ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கிக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்துவந்தது. அவர்களுக்கு அமெரிக்காவின் பல்வேறு உதவிகள் உயரத்திற்கு வருவதற்கு தேவைப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு துருக்கி அமெரிக்கா சொல்லுவதை கேட்பதில்லை. அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி பிற அரசியல் கலாசார அமைப்புகளின் தாக்கம் அப்படியுள்ளது. இப்படித்தான் உலகம் மெல்ல மாறி வருகிறது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு ஆட்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அரசு பிற நாடுகளின் ஜனநாயகத்தி்ற்காக பேசும் அதிகாரம் கொண்டிருக்கிறதா?
நான் இதற்கு கூறும் ஆலோசனை ஒன்றுதான். ஒவ்வொரு நாடுகளுக்கும் அவற்றுக்கு உரித்தான பல்வேறு எதிரிகளை சமாளிக்க வேண்டியுள்ளது. பிற நாடுகள் தவறுகள், வெற்றிகளை கவனமாக பார்த்து தங்களை திருத்திக்கொள்ளலாம். இதுதான் இங்கு நான் நேர்மையான முறையில் கூற விரும்புவது. சுதந்திரம் என்பதிலுள்ள பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட நாடு அமெரிக்கா என்று இச்சம்பவத்தை புரிந்துகொள்ளலாம். தனிப்பட்ட ஒரு நகரின் மீதான தாக்குதல் என்று புரிந்துகொண்டுவிடக்கூடாது.
இன்று ஜனநாயகம் அழிந்துவருவதை நீங்கள் ஏற்கிறீர்களா?
மேற்குல ஜனநாயகம் என்பது பல்வேறு பிரிவினைகளுக்கு உட்பட்டது. இது வெறும் ஐடியாக்களின்பாற்பட்டது அல்ல. இனம், நிறத்தின் அடிப்படையைக் கொண்டது. இதனால்தான் ஜனநாயக நாட்டை உருவாக்க காந்தி, நேரு செய்த முயற்சிகளின் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஜனநாயகத்தை தக்கவைத்துக்கொள்ள நீண்டகாலநோக்கில் செய்த மதச்சார்பற்ற நாடு என்ற சிந்தனை முக்கியமானது. இந்த சிந்தனை இல்லாதபோது வாஷிங்டனில் நடந்தது போல ஆயுதப்போராட்டம்தான் நடைபெறும்.
நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியது ஏன்?
நான் வளர்ந்த வந்த காலம் 1970. அப்போது இந்தியாவின் பிரதமராக இந்திராகாந்தி இருந்தார். தனியார் வங்கிகளை அவர் தேசியமயமாக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தார். அப்போது எனக்கிருந்த மனநிலையில் நான் சுதந்திரமான சாகசங்களை செய்ய அனுமதிக்கும் நாடான அமெரிக்காவுக்கு செல்ல விரும்பினேன். அப்போது இருந்த இந்தியா மிகவும் கடினமான புதிரான நாடாக இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஆற்றல்பூர்வம் கொண்ட நாடாக மாறியிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. நான் இதனைச்சொல்லும்போது ஒரு சமூகத்தை விட மற்றொன்றை உயர்வாக கூறவில்லை. இன்னொரு நாட்டில் சென்று வாழ நினைத்தது என்னுடைய முடிவுதான்.
பரீத் ஜக்காரியா |
ஐரோப்பாவில் உள்ள சமூக பொருளாதார கட்டமைப்புதான் நமக்கும் பின்பற்றவேண்டிய மாதிரியாக இருக்குமா?
ஐரோப்பாவில் முதலாளித்துவம்தான் அதிகாரத்தில் இருந்தாலும் கூட அது மக்களுக்கான இடத்தை கொடுத்துள்ளது. சமூகதளத்தில் மக்களுக்கான இடம் உள்ளது. ஆனாலும் கூட அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு பொதுவான அரசு என்பது இன்றுவரை இல்லை. இதனால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் உலக அரங்கில் எதிரொலிக்கும் வாய்ப்புகள் குறைவு. அத்தனை நாடுகளும் ஒன்று சேர்ந்த சமூக பொருளாதார கட்டமைப்பை உலகின் முன்வைக்கவில்லை. ஆனால் அமெரிக்கா அதனை செய்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை தவறான அரசு நிர்வாகம், பெருநிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மை என இரண்டில் எதனை உங்கள் கருத்தாக ஏற்கிறீர்கள்?
இரண்டையும்தான். விவசாயத்துறை இந்தியாவில் தொடக்கம் முதலே தவறாக மேலாண்மை செய்யப்பட்டு வந்தது. சீர்திருத்தங்களை செய்யாதபோது பொருளாதாரத்தை ஆக்கப்பூர்வமாக வழிநடத்துவது கடினம். இந்த வகையில் அரசின் மீது எனக்கு இரக்கம் உள்ளது. ஆனால் பெருநிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மை மக்களுக்கு பெருகியிருப்பதால், பொருளாதாரத்திற்கு பாதிப்புதான் நேரும். விவசாயிகளின் போராட்டத்தை அதிக காலத்திற்கு புறந்தள்ளிக்கொண்டே இருக்கமுடியாது.
டிரம்பை எப்படி சமாளித்திருக்க வேண்டும்?
அவரை நீங்கள் அரசியல்ரீதியாக தோற்கடிக்கலாம். ஆனால் சட்டரீதியாக செய்யமுடியாது. காங்கிரஸ் சபை அவரை வெளியேற்றுவதற்கு முடிவெடுத்தாலும், மக்கள் அவரின் செயல்களால் களைப்புற்று அவரை வெளியேற்றுவது சரியான முடிவு. தேர்தல்முடிவு அவரை அரசியல்ரீதியாக அகற்றினாலும் அவரின் செயல்பாடுகளை குற்றங்களாக கருதாது.
அமெரிக்கா தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவேண்டிய நேரமா இதுழ
உண்மையில் இது அமெரிக்காவிற்கான எச்சரிக்கை மணி. ஏன் பிறநாடுகளில் இந்தியாவும் கூட இதனை கவனிக்கவேண்டும். பத்து முதல் 20 சதவீத மக்களைக் கொண்டுள்ள பொருளாதாரத்தை இந்நாடுகள் கொண்டிருக்கின்றன. இனம், மதம் ரீதியான வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் கூட பொருளாதாரரீதியாக மக்களை ஒற்றுமையாக்குவது கடினமாகவே இருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக