மூக்கில் ரத்தம் கொட்டினால் என்ன அர்த்தம்? உ்ணமையும் உடான்ஸூம்

 

 

 

 

Manmadhan Simbu STR





1.உடலைக் கடுமையாக வருத்திக்கொண்டால் மூக்கில் ரத்தப்பெருக்கு ஏற்படும்.

ரியல்: 1980களில் வெளியான ஆங்கில திரைப்படங்கள், காமிக்ஸ்களில் அதிசய சக்தி கொண்ட நாயகர்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தினால் பக்கவிளைவாக மூக்கில் ரத்தம் கொட்டி மயங்கி விழுவார்கள். உண்மையில் பனி, வறண்ட காலநிலையில் மூக்கில் ரத்தம் கொட்டுவது இயல்பானது. உயர் ரத்த அழுத்தம், மூக்கை விரலால் நோண்டுவது காரணமாகவே பெரும்பாலானோர்க்கு மூக்கில் ரத்தம் கொட்டுகிறது. சில நிமிடங்கள் தானாகவே ரத்தம் கொட்டுவது நின்றுவிடும். இப்படி ரத்தம் கொட்டுவதற்கு எபிஸ்டாக்சிஸ் (Epistaxis) என்று பெயர். ரத்தம் உறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம். உடலை அல்லது மூளையை அதிகம் பயன்படுத்துவதால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதில்லை.

2. பூமியில் நிலநடுக்கும் ஏற்படுவது போல வானிலும் ஏற்படுவது உண்டு.

ரியல்: சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள அலபாமா மாநிலத்தில் சில பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தாற் போன்ற பெரும் சத்தம் கேட்டது. இந்த ஒலிகள் இரண்டு, மூன்று நாட்கள் ஒலித்திருப்பதை தேசிய தட்பவெப்பநிலை சேவை மையம் பதிவு செய்துள்ளது. திடீரென அப்பகுதியில் ஏற்பட்ட ஒலிக்கு விமானங்கள் அல்லது நிலநடுக்கங்கள் காரணம் இல்லை என பின்னர் கண்டறியப்பட்டது. சுனாமி ஏற்படும் போது அலைகள் ஏற்படுத்தும் இரைச்சல், கடல் படுகையிலிருந்து மீத்தேன் வாயு வெளியேறுவது, அமெரிக்காவின் ரகசிய விமானம் செல்வது என பல்வேறு விளக்கங்களை ஆராய்ச்சியாளர்கள் பேரொலிக்கு காரணமாக கூறிவருகின்றனர். ஸ்கைகுவேக் (Skyquake) எனப்படும் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

3. வாகனங்களில் தற்போது பயன்படுத்தும் ஸ்டார்ட் – ஸ்டாப் முறை எரிபொருள் சிக்கனத்திற்கானது.

ரியல்: உண்மைதான். 2017ஆம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், ஸ்டார்ட் – ஸ்டாப் இயங்குமுறையை உருவாக்கியது. இம்முறையில் பிரேக் பெடலை நன்கு அழுத்தினால் வண்டி எஞ்சின் அணைந்துவிடும். பெடலிலிருந்து காலை எடுத்தால் வண்டி இயக்கத்திற்கு வரும். சிக்னலில் காத்திருக்கும்போது, முக்கியமான நேர போக்குவரத்து நெருக்கடிகளில் இந்த தொழில்நுட்பம் எரிபொருளை சேமிக்கும். இம்முறையை ஃபோக்ஸ்வேகன், அமெரிக்காவை கருத்தில் கொண்டே உருவாக்கியது. கடும் வெயில், பனி ஆகிய சூழ்நிலைகளிலும், காரிலுள்ள ஏசியை அதிகளவு பயன்படுத்தும்போதும் ஸ்டார்ட்- ஸ்டாப் வசதி எதிர்பார்த்த பயன்களைத் தராது. நகரில் காரில் சுற்றிவந்து பணி செய்பவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளது. இதன்மூலம் 15 சதவீதம் காற்று மாசுபாடு குறையும் என்கிறார்கள் வாகனத்துறை சார்ந்த வல்லுநர்கள்.



4. உலகில் ஹீலியம் தீர்ந்துபோனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

ரியல்: ஹீலியத்தை நாம் சுவாசிப்பதில்லை என்பதால் பயம் வேண்டாம். ஹீலியத்தின் அளவு குறைந்தால் எம்ஆர்ஐ சோதனை, வெப்பவாயு பலூன், எல்சிடி திரைகள் ஆகியவற்றின் விலை கூடும் அவ்வளவுதான். ஹீலியம் வணிக முறையில் அமெரிக்காவில் 80 சதவீதம் பெறப்படுகிறது. அணு உலைகளிலும், எம்ஆர்ஐ சோதனைகளில் காந்தங்களை குளிரூட்ட பயன்படுகிறது. நமது உலகில் இப்போதுள்ள ஹீலியம் வாயுவின் அளவு 0.0005 சதவீதம் ஆகும்.

5. பூமியின் மையப்பகுதி குளிர்ந்தால் நம் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்.

ரியல்: உண்மை. பூமியின் மையப்பகுதி இரும்பு, லாவா கலவை கொண்டு 6,093 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதித்துக்கொண்டிருக்கிறது. இந்த வெப்பநிலை காலப்போக்கில் மெல்ல அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக பூமியிலும், அதற்கு வெளியிலும் உள்ள காந்தவிசை சிறப்பாக செயல்படுகிறது. பூமியில் நிலவும் வெப்பம் உயிர்கள் வாழ்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பூமியின் மையப்பகுதி மெல்ல குளிரத்தொடங்கினால், பூமி சூரியப் புயல்கள், கதிர்வீச்சுத் தாக்குதல்களுக்கும் ஆளாகும் வாய்ப்பு உள்ளது. வெப்பம் குறைவதால் பூமியில் நிறைய இடங்களில் இருள் படரத் தொடங்கும். நிலம் மெல்ல குளிர்ச்சியாகும் என்கிறார்கள் புவியியல் வல்லுநர்கள்.


கருத்துகள்