பாலியல் வல்லுறவுக்குள்ளான தங்கைக்கு நியாயம் தேடி நகரம் வரும் கிராமத்து மனிதனின் வாழ்க்கை! - நரசிம்முடு
நரசிம்முடு
பஸ்ஸில் ஜெயசித்ராவின் பெண்ணை கல்லூரி மாணவர்கள் மானபங்கம் படுத்த முயல்கிறார்கள். அவர்களை அடித்து உதைத்து மூஞ்சி முகரையை பெயர்க்கிறார் என்டிஆர் ஜூர். ஆனால் ஒரு வார்த்தை பேசுவதில்லை. முழுக்க அடிதான். பதினைந்து பேர்களை அடித்து நொறுக்கி புத்தூர் கட்டு போட வைத்ததிற்காக அவரை போலீசார் கைது செய்கிறார்கள். அங்கு வரும் ஆசிஷ் வித்யார்த்தி(கமிஷனர்) என்டிஆரைப் பார்த்து எரிச்சலாகி விசாரணை செய்ய முயல்கிறார்.
ஆனால் என்டிஆருக்கு பேச்சு வராது ஊமை என்று சொல்ல ஆசிஷ் அமைதியாகிறார். என்டிஆரின் கண்களை மட்டும் அவரால் மறக்கவே முடியவில்லை. என்டிஆரை, ஜெயசித்ரா தான் வாழும் காலனிக்கே கூட்டி வருகிறார். கொண்டுவீடு எனும் கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு என்டிஆர் எதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் பிளாஷ்பேக் கதை.
இந்த படத்தில் வரும் ரேஷன் கார்டில் என்டிஆர் பெயரை அவரது மொத்த கிராமமுமே சேர்த்திருக்கிறார்கள். இக்காட்சியை அப்படியே சுட்டு எங்கள் ஆசான் படத்தில் வைத்திருக்கிறார்கள். தெலுங்கில் இந்த காட்சி இயல்பாக உள்ளது. அதற்கான காரணமும் கூட நெகிழவைக்க கூடியது.
என்டிஆரின் தங்கை வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அதை தடுக்க நினைக்கும் அவரது தந்தையும் ஆளும் கட்சி எம்எல்ஏவினாலும் ரவுடி குழுக்களாலும் கொல்லப்படுகிறார்கள். இதனால் வெகுணடு எழுந்து கண்ணில் எவரெஸ்ட் மிளகாய்த்தூளின் நிறத்தை காட்டும் என்டிஆர் எல்லோரையும் மினி சூலாயுதத்தினால் குத்தியே கொல்கிறார்.
அதில் மிஞ்சும் ஒருவரை கொல்ல நினைக்கும்போது ஆசிஷ் வித்யார்த்தி குறுக்கே வந்து தடுக்க நினைக்கிறார். அவரை மீறி என்டிஆர் புஜபல பராக்கிரமத்தை காட்டி கலாபவன் மணி(போத்திராஜூ) உயிரை எப்படி எடுக்கிறார் என்பதுதான் இறுதிக்காட்சி.
அமிஷா படேல் அழகாக இருக்கிறார். அம்சமாக பாடல்களில் ஆடுகிறார். இவர் கிராமத்திற்கு அலாட் செய்யப்பட்டவர். எனவே, நகரத்தில் கேரளத்து பெண்ணாக உடல்மேல் சேலை அணியாத பெண்ணாக சமீரா ரெட்டி வருகிறார். அங்கும் பாடல்களை நாம் கேட்கவேண்டாமா?
சிறுமி
வல்லுறவு செய்யும் காட்சிகளை
படத்தில் காட்டாதது பாராட்டவேண்டிய
விஷயம். மற்றபடி
படம் படுசீரியசாக செல்லுகிறது.
இதில்
காமெடி என்பதே பின்பகுதியில்தான்.
எனவே
படத்தை கொண்டாட்டமாக ரசிப்பது
கடினம்.2004இல் வெளியான கன்னடபடமான துர்கியின் ரீமேக் இது.
சிம்மா... நரசிம்மா…
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக