ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மாட்டிக்கொள்ளும் மனிதர்கள்! - சீன ஆப்களின் இன்ஸ்டா லோன் பயங்கரம்!

 

 

 

 

 Mortality, Skull And Crossbones, Vanitas

 

 

 

கடன் ஆப்கள் - கடன் பெற்றவர்களை அவமானப்படுத்திக்கொல்லும் கொடூரம்!


சீனாவைச் சேர்ந்த கடன் ஆப்கள் மூலம் கேரளம், தமிழகம், தமிழகம் மாநிலங்களைச் சேர்ந்த பலர் தற்கொலை செய்துள்ள நிலை வேதனைக்குரியது. எப்படி இப்படி ஒரு நிலை ஏற்படுகிறது? மொபைல் ஆப்கள் மூலம் இன்ஸ்டன்டாக கடன்கள் கிடைப்பதுதான் இதனை பலரும் நாடிச்செல்லுவதற்கு முக்கியக் காரணம், பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த பலரும் இந்த ஆப்களில் கடன் வாங்கியுள்ளனர்.


கடன் வழங்கும் சீன நிறுவனங்கள் பலரும் வங்கியல்லாத பல்வேறு நிதிநிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு செயல்பட்டு வருகின்றன.


இதில் கடன் வேண்டும் என்பவர்கள் தங்களை ஒரு செல்ஃபீ எடுத்து பதிவிடுவதோடு, ஆதார் கார்டு தகவல்களையும் தர வேண்டும்.


கடன்களைப் பெற்றவர்கள் அதனை கட்டுவதற்கு 91 முதல் 360 நாட்கள் காலம் தருகிறார்கள்.


கடன் பெற்றவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு கடனை கட்டுவதற்கான நிர்ப்பந்த அழைப்புகள் தொடர்புடைய கடன் நிறுவனங்களிலிருந்து வரத்தொடங்கும்.


போனில் கடன் ஆப்களை தரவிறக்கும்போது ஒருவரின் போன்புக் தகவல்கள் அனைத்தும் சீன நிறுவனங்களுக்கு சென்றுவிடும். எனவே தொடர்புடையவர் இப்படி கடன் பெற்றுவிட்டு தராமல் இருக்கிறார் என்று தகவல்களை அனைத்து உறவினர்கள், நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இதனால் அவமானப்படுபவர்கள் அனைவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.


தெலங்கானா மாநிலத்தில் இப்படி முப்பது பேர்களை காவல்துறை கைதுசெய்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனாக வழங்கப்பட்டுள்ளது. நான்கு சீன நிறுவனங்கள் மூலம் 21 ஆயிரம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிட்காயின் பரிமாற்றமும் நடந்துள்ளது. இதனால் அமலாக்கத்துறை இதில் தலையிட்டுள்ளது. 110 கோடி ரூபாயை காவல்துறை பயன்படுத்தமுடியாதபடி தடுத்து வைத்துள்ளது.


இதிலிருந்து எப்படி தப்புவது?


டிஜிட்டல் வகையிலான கடன்களில் ஹெச்டிஎப்சி வங்கி முன்னிலை வகிக்கிறது. எஸ்பிஐ கூட யோனோ ஆப் மூலம் கடன்களை வழங்குகிறது. நேரடியாக அல்லது ஆப் மூலமாக என எதுவாக இருந்தாலும் ஆர்பிஐயின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான். எனவே கடன்களை வாங்கும் முன்னர் அவர்களின் நிபந்தனைக்குட்பட்ட சமாச்சாரங்ளளை தீர்க்கமாக படித்துவிடுவது அவசியம். ஆர்பிஐ நிபந்தனைகளுக்கு உட்படாமல் கடன் கொடுப்பவர்கள் முன்னருமே உண்டு. டிஜிட்டல் வழியாக சீன நிறுவனங்கள் உள்ளே வருவதால் அவர்களால் இதில் நிறைய மக்களை அணுகுவதோடு, விதிகளை புறந்தள்ளி செயல்படவும் முடிகிறது என்கிறார் ஜெஸ்ட் மணி நிறுவனத்தின் நிறுவனரான லிஸ்ஸி சாப்மன்.


வாடிக்கையாளர்களை பற்றி அதிகமாக தகவல்களை வங்கிகள் கேட்டுத்தான் கடன்களை வழங்குகிறார்கள். இதனை டிஜிட்டல் ஆப் நிறுவனங்கள் கேட்கவே மாட்டார்கள். அடுத்து உங்கள் சம்பளம் பற்றிய தகவல்களையும் கேட்க மாட்டார்கள்.


டிஜிட்டல் ஆப் நிறுவனங்களைப் பொறுத்தவரை குறைந்த காலகட்டம் அதிக வட்டி என்று செயல்படுவதால் நீங்கள் கவனமாக இருந்தால் மட்டுமே பிரச்னையிலிருந்து தப்பிக்க முடியும்.


கூகுளில் மாற்றப்பட்ட புதிய விதிகளின்படி, அறுபது நாட்களுக்கு குறைவாக கடன் கொடுத்து அதற்கு வட்டி வசூலிக்கும் ஆப்களுக்கு அதில் இடமில்லை. ஆனாலும் கூட இந்த விதிகளை ஏமாற்றி நிறைய கடன் வழங்கும் ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன. இப்படி கடன்கொடுக்கும் 158 ஆப்களை நீக்க தெலங்கானா காவல்துறை கூகுளிடம் கோரியுள்ளது.


டைம்ஸ் ஆப் இந்தியா





கருத்துகள்