ஜம்மு காஷ்மீரில் வெற்றிபெற்றுள்ள அசாதாரண மனிதர்கள்! - மருத்துவர் முதல் ஆசிரியர் வரை

 

 

 

 

 

 

 

 

 


காஷ்மீரில் சட்டக்கல்லூரி மாணவர் முதல் பல்மருத்துவர், ஆசிரியர் என பல்வேறு நபர்கள் அரசியல் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அவர்களி்ல சிலரை நாம் இங்கு பார்ப்போம்.


சபிர் அஹ்மது லோன்


ரோஹமா பரமுல்லா


தேசிய மாநாட்டு பணியாளராக 1999ஆம் ஆண்டு தொடங்கி பணியாற்றினார். பொதுமக்களுக்கான அமைதி சட்டம் அடிப்படையில் கைதான அரசியல்வாதிகளில் லோனுக்கும் முக்கிய இடமுண்டு. ஆறுமாதம் ஶ்ரீநகர் சிறைவாசம் அனுபவித்தவர், மாநிலம் யூனியன் பிரதேச அந்தஸ்து பெற்றபிறகு விடுதலையானார்.


மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நோக்கி போராடுவோம் என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸகூர் அஹ்மது மிர், என்பவரை எதிர்த்து நின்று 1500 வாக்குகள் அடிப்படையில் வென்றுள்ளார். 2014இல் உருவாக்கப்பட்ட சாலைகளை மேம்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.


இர்பான் ஹபீஸ் லோன்


சங்ராமா, வடக்கு காஷ்மீர்


2007இல் காஷ்மீர் பல்கையில் சட்ட மாணவராக படித்துக்கொண்டிருந்தார். சிந்து ந்தி நீர் ஒப்பந்தம் காரணமாக காஷ்மீருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி போராட்டம் செய்தார். 13 ஆண்டுகாலமாக அரசியல் நீடித்து இரண்டுமுறை நின்றும் கூட தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை. நாற்பதுவயதில் சோயப் நபி லோனை வென்றுள்ளார். மேதாபட்கர், யோகேந்திர யாதவ், இரோம் சர்மிளா போன்ற செயல்பாட்டாளர்கள் தேர்தலில் நின்று தோற்றுபோயுள்ளனர். ஆனால் எனது வெற்றி இளைஞர்களை அரசியலை நோக்கி ஈர்க்கும். நான் மக்களுக்காக போராடவே தேர்தலில் நின்று வென்றுள்ளேன். குப்கார் கூட்டணியின் நோக்கங்களில் எனக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்களுக்காக அவர்களுடன் இணைந்து பாடுபடுவேன். ஶ்ரீநகர் பரமுல்லா நெடுஞ்சாலை விரிவுபடுத்துவது ஆபத்தான பொறி என எச்சரிக்கிறார்.


ப்னா பைக்


வகூரா, வடக்கு காஷ்மீர்


2018ஆம் ஆண்டு சஃபீனா பைக் பிடிபி கட்சியின் பெண்கள் பிரிவில் தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது கணவர் முசாபிர்

ஹூசைன் பைக்கின் பின்னால் பணிபுரிந்துவந்தார். இவரது கணவர் பிடிபி கட்சியை தோற்றுவித்த உறுப்பினர்களில் ஒருவர் ஆவார். குப்தார் கூட்டணி ஒன்று சேர்ந்து போட்டியிட்டதில் ஹூசைனுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சபீனா இதுபற்றிய விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளினார். அலிகார் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சபீனா, அரசியல்வாதியின் மனைவியாக இருக்கும்போது அரசியலை எப்படி விட்டு விலகி இருக்கமுடியும்?


எனது அரசியல் முடிவுகள் எனது கணவரைச் சார்ந்தது. நான் எதிர்காலம் பற்றிய யோசிப்பதும் அவரைச் சார்ந்து உள்ளது என்பவர் சுயேச்சையாக வென்றுள்ளார்.


மின்கா லத்தீப்


காகபோரா, புல்வாமா


22 வயதாகும் இளம்பெண் தேர்தலில் பாஜக சார்பில் நின்று வென்றுள்ளார். மூன்றாம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார். பொதுச்சேவை சார்ந்து எனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைத்துள்ளேன் என்பவரின் தந்தையும பாஜகவைச் சேர்ந்தவர்தான். பெண்களுக்கான தொகுதியில் நின்று வென்றுள்ளார். வெறும் 14 வாக்குகள் வித்தியாசதில் பிடிபி கட்சி வேட்பாளரை வென்றுள்ளார். காகபோரா கிராமத்திற்க சாலைகளை அமைக்கப்போகிறாராம்.


டாக்டர் மனோகர் சிங், பிடிபி


நவ்சேரா, ராஜோரி


இங்கு ஏராளமான பாஜக மந்திரிகள் வந்தாலும் கூட அத்தனை பேரையும் சாய்த்து 10,579 வாக்குகளில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார் இந்த டாக்டர்.


பாகிஸ்தானின் எல்லைப்பகுதி என்பதால் வளர்ச்சிப்பணிகள் கிடையாது. பாக். ராணுவம் ஷெல் அடிப்பதால் மக்கள் கொல்லப்படுகிறார்கள். வீடுகள் சேதமாகின்றன. இவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை என வருத்தப்பட்டே வேட்பாளராக நின்று வென்றுள்ளார் மனோகர். 2014இல் மோடி அலையால் வென்ற ரவிந்தர் ரெய்னா, பிறகு தொகுதிப்பக்கமே வரவில்லை. சுகாதாரம், மின்சார வசதி ஆகியவற்றை செய்துகொடுப்பதாக கூறியுள்ளார்.


சாஸியா கௌசர்


புதல் ஓல்ட், ராஜூரி


சன்ஜ்வான் என்ற ஏரியாவில் பணிபுரிந்த ஆசிரியை தேர்தலுக்காக தனது பதவியை உதறிவிட்டு தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்றுள்ளார். நேஷனல் கான்பெரன்ஸ் கட்சி வேட்பாளரை 2,446 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். பெண்களுக்காக ஒதுக்கப்ட்ட தொகுதி இது. இப்பகுதியில் மேம்பாட்டு கௌன்சில் தலைவராக உள்ள ஜாவேத் இக்பால் இவருடைய கணவர்தான். சாலைகளை அடையவே நான்கு மணிநேரம் செல்ல வேண்டிய அளவில்தான் இங்கு சாலைகள் அமைந்துள்ளன. அவற்றை சரிசெய்வதோடு அந்த வட்டாரத்தில் பள்ளிகளை அமைக்கவும் எண்ணியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்