கருக்கலைப்பு, கருத்தடை தொடர்பான டிரம்ப் அரசின் சட்டங்களை நீக்கவிருக்கிறோம்! - அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன்
அலெக்சிஸ் மெக்கில் ஜான்சன்
பிளான்டு பேரன்ஹூட் தலைவர்
பைடன் தலைமையிலான அரசில் உங்கள் முன்னுரிமைப்பணிகள் என்ன?
நாங்கள் டிரம்ப் காலத்தில் உருவாக்கப்பட்ட கருத்தடை சட்டங்களை நீக்கவுள்ளோம். மேலும், கருக்கலைப்புக்ககு அரசு நிதியைப் பயன்படுத்துவதற்கு உள்ள சட்டத்தையும் விலக்கிக்கொள்ள உள்ளோம். பாலியல், கருவுறுதல் தொடர்பாக நாங்கள் பணியாற்ற உள்ளோம்.
ஜனநாயக கட்சியினர் அவையில் சிறப்பாக செயல்பட்டது போல தெரியவில்லையே? 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?
7 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பைடன் ஹாரிசுக்கு வாக்களித்துள்ளனர். இவர்களில் பலரும் இளைஞர்கள், நிறம், இனம், மதம் கருதாது வாக்களித்தவர்கள். இனக்குழு சார்ந்த பிரச்னைகளை இதன்மூலம் தீர்க்க முடியும்.
சுகாதாரத்துறை மனிதவளத்துறை சேவைகள் துறைக்கு ஸேவியர் பெசேரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
பைடன் அவரை நியமித்துள்ளது எதிர்பார்ப்பிற்குரியது. பெசேரா கருவுறுதல் தொடர்பான விவகாரங்களில் திறமைசாலி. சுகாதாரத்துறையில் உள்ள பாகுபாடான தன்மையை சரியாக புரிந்துகொண்டவர்.
ஏமி கானி பெரட்டை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தது உங்கள் செயல்பாடுகளை பாதிக்குமா?
நீதிமன்றங்களில் நடைபெறும் சட்டப்போராட்டம் என்பது தவிர்க்க முடியாது. இனி மாகாணங்களிலும் நிறைய சட்டப்போர்கள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.
ஹாரிஸ் தனது பிரசாரத்தில் பெண்களின் ஆரோக்கியம் பற்றி பேசினார். அவரது வெள்ளைமாளிகை செயல்பாடு உங்கள் வேலையில் என்ன தாக்கம் ஏற்படுத்தும்?
குழந்தை இறப்பு பற்றி அவர் கூறியதை முக்கியமாக கருதுகிறேன். அடுத்து அமரவிருக்கும் புதிய தலைமையில் பழைய சட்டங்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.
பிளான்டு பேரன்ஹூட் எப்படி செயல்படவிருக்கிறது?
இந்த அமைப்பு 104 ஆண்டு தொன்மையானது. எங்களது வேலை மதிப்புக்குரியது என்பதை உணர்ந்து பணியாற்றி வருகிறோம்.
டைம்
கருத்துகள்
கருத்துரையிடுக