பிரேசில் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தில் இந்தியா கற்கவேண்டியது என்ன?

 

 

 

 



 

 

Brazil's Bolsa Familia - Women Deliver

 

 

நேரடி பணப்பரிமாற்றத்தில் இந்தியா கற்கவேண்டியவை!


இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் முதல் 52 அமைச்சகங்களை ஒன்றாக இணைத்து, 384 நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றுசேர்வதற்கான முயற்சிகளை செய்து வந்த்து. நேரடி வங்கிக்கணக்கு பரிமாற்றம் மூலம் நலத்திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்திவருகிறது. பிரதான் மந்திரி காரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்குவதோடு வறுமை ஒழிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளர்க்கவும் உதவுகிறது.


நீண்டகால நோக்கில் இதனை விரிவுபடுத்தி, குறைகளைக் களைந்தால் மட்டுமே நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றுசேரும். இந்திய அரசின் சிந்தனைகள் சரியாக இருந்தாலும் அனைத்து திட்டங்களிலும் ஒருங்கிணைப்பு முறையாக இல்லாததால் மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு திட்டம், பிரதான் மந்திரி மாட்ரி வந்தனா யோஜனா ஆகிய திட்டங்களில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களுக்கான பயன்களைப் பெற முடியவில்லை.


2015ஆம் ஆண்டு டில்லியில் நிதி அமைச்சகம் ஒருங்கிணைத்த பொருளாதார மாநாட்டில், ஜன்தன் ஆதார் திட்டம் விவாதிக்கப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் போல்சா ஃபேமிலியா(Bolsa Familia) என்ற நேரடி பணப்பரிமாற்ற திட்ட இயக்குநர் லூயிஸ் ஹென்ரிக் பைவா பங்கேற்றார். இவர் நேரடி பணப்பரிமாற்றத்திட்டம் சமூக ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதைவிட வறுமையின் சதவீதத்தை குறைகிறது என்பதை ஆதாரத்துடன் விளக்கினார்.


2003ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் போல்சா ஃபேமிலியா திட்டம் அமலானது. முதல் மூன்று ஆண்டுகள் நடைமுறைப் பிரச்னைகளை சந்தித்த்து. அந்நாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மாதவருமானமாக ரூ.2,063 வங்கிக்கணக்கில் அரசு செலுத்தியது. 2003இல் 36 லட்சமாக இருந்த மக்களின் எண்ணிக்கை 2014இல் 1.2 கோடியாக அதிகரித்தது. இதற்காக பிரேசில் அரசு ஒதுக்கிய நிதி 2.5 சதவீதம். வறுமைக்காக கொடுக்கப்பட்ட நிதி மூலம் ஊட்டச்சத்துக் குறைவால் இறக்கும் குழந்தைகளின் சதவீதம் குறைந்து, மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவர்களின் சதவீதம் 75.7% ஆக உயர்ந்தது. மாணவர்கள் பள்ளிக்கு வரும் வருகைப்பதிவும் 85 சதவீதமாக கூடியது.


பிரேசில் நாட்டில் மத்திய அரசின் நிதியுதவியைப் பெற்ற மாநிலங்கள் அதனை சிறப்பாக மேம்படுத்தியுள்ளன. கடாஸ்ட்ரோ(the Cadastro) எனும் ஒற்றை தகவல்தளம் மூலம் நாடு முழுக்க நேரடி பணப்பரிமாற்ற திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கான பயிற்சியை மத்திய அரசு, மாநில அரசுகளின் அதிகாரிகளு்க்கு வழங்கியுள்ளது. பிரேசில் நாடு நிலப்பரப்புரீதியாக இந்தியாவைப் போன்றதல்ல என்றாலும் பல்வேறு மொழிகளைக் கொண்ட மக்கள் என்றரீதியில் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. சமூக பாதுகாப்பு விஷயத்தில் பிரேசிலின் இந்த உதாரணம் இந்தியாவுக்கு பயனளிக்கும் ஒன்று.


தகவல்

scroll.


https://scroll.in/article/977601/what-india-can-learn-from-brazil-in-providing-social-protection-to-its-vulnerable-citizens


Andrés Fortunato




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்