காணாமல் போகும் அச்சகங்கள்! - திருநெல்வேலி, கோவை, மதுரையில் தள்ளாடும் பழமையான அச்சகங்கள்
கணினி வந்தபிறகு டிஜிட்டல்ரீதியான போஸ்டர்கள், பேனர்கள் என்று தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகின்றன. இன்னொருபுறம் இதன் விளைவாக எந்திர அச்சகங்கள் அதிக வாய்புப்புகளின்றி மெல்ல மூடப்படும் நிலையில் உள்ளன. அவற்றில் சில அச்சகங்களைப் பார்ப்போம்.
ஶ்ரீ ரத்னம் பிரஸ், திருநெல்வேலி
ஜெயபால் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார். இவரது தந்தை ரத்னம் மேலப்பாயத்தில் பிரஸ்ஸில் பணிபுரிந்துவிட்டு தனியாக அச்சகத்தை தொடங்கியுள்ளார். முதலில் நிறைய ஆட்கள் வேலை செய்து வந்தனர். தற்போது ஒருவர் மட்டுமே இருக்கிறார். நகைக்கடைகள், காபி கடைகளிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களை செய்து கொடுத்து வருகின்றனர். பல்லாண்டுகளாக சோறு போட்ட தொழில் என்பதால், ஜெயபாலுக்கு இதனை விட மனமில்லை. ஆனால் வேலைகளே இல்லாத நிலையில் எத்தனை ஆண்டுகாலம் இப்படியே நடத்த முடியும் என்பதுதான் அவர் முகத்தில் தொக்கி நிற்கும் கேள்வி.
நியூ சரவணா புக் பைண்டிங்,
கோவை.
மேட் இன் இந்தியா பொருட்களை பயன்படுத்துவோம் என பலரும் ஊக்கம் கொண்டிருந்தபோது டவுன் ஹாலில் புகழ்பெற்றிருந்த அச்சகம் நியூ சரவணாதான். காகிதத்தை வெட்டும் மெஷின், சிங்கிள் கலர் லெட்டர் பிரஸ் மெஷின்களின் அருகில் பெருமிதமாக நிற்கிறார் சரவண முருகன். இவரது தந்தை இந்த மெஷின்களோடு 50 ஆண்டு காலம் உழைத்துள்ளார். சரவணன் தந்தைக்கு உதவி செய்வதற்காக வேலை செய்யும்போது ஒருமணிநேரத்தில் 2 ஆயிரம் பில் புத்தகங்கள், கல்யாண பத்திரிகை ஆகியவற்றை தயாரித்து தந்திருக்கின்றனர். தற்போது நவீன மெஷின்களுக்கு நகர்ந்துவிட்டார் சரவணன். ஆனாலும் கூட பழைய மெஷின்களை தனியறையில் கவனமாக பராமரித்து வருகிறார்.
பிரிண்டிங் பிரஸ், வேலூர்.
ஞானவேல், நெடுமாறன், நடராஜன் ஆகியோர் வேலூரிலுள்ள பிரஸ் ஒன்றுக்கு உரிமையாளர்கள். 1980ஆம் ஆண்டு தொடங்கி பிரஸ்ஸில் பணியாற்றி வருகிறார் ஞானவேல். முதலில் கிடைத்த வாடிக்கையாளர்கள் இப்போது தேட வேண்டியதாக உள்ளது என்று கூறுகிறார். நெடுமாறன் அண்மையில் அச்சக மெஷினை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். தான் வாங்கும்போது அதனை 15 ஆயிரத்திற்கு வாங்கியுள்ளார். 1978இல் இப்பணிக்கு வந்தவர் இவர். இப்போது பில் புக்கிற்கான ஆர்டர் கிடைப்பதே கடினமாக உள்ளது என்கிறார்கள். ஜி.ஆர். பாளையம் எனுமிடத்தில் இவர்களின் அச்சகம் செயல்படுகிறது.
சோமன் அச்சகம், மதுரை
சோமனின் அச்சு மெஷினை பார்த்தால் கருப்பு வெள்ளை காலத்திற்கே பலரும் போய்விடுவோம். அதன் எந்திர அமைப்பு்ம், மரங்களின் பயன்பாடும் அப்படி உள்ளது. மும்பையில் வெங்கடேஷ்வரா பிரஸை தொடங்கி நடத்தினார். பின்னர் டெஸ்க்டாப் ப ப்ளிஷிங் பிரபலமானதும் வியாபாரம் நசிந்துபோனது. எனவே அவர் மதுரைக்கு திரும்பினார். தற்போது தனது வீட்டில் மெஷினை வைத்து பராமரித்து வருகிறார். இதேபோலதத்தான் கண்மணி பிரிண்டர்ஸை திருஞானம் தொடங்கினார். இப்போது தனது மெஷின்களை வேறுவழியின்றி விற்றுவிட்டு வாழ்கிறார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக