நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை நடிப்பில் பிரதிபலிக்கிறேன்! - ரிச்சா சதா
ரிச்சா சதா
தனது அரசியல் நிலைப்பாடுகளை கூட வெளிப்படையாக கூறும் தைரியம் பெற்ற இந்தி நடிகை. நாடகங்கள், சினிமா, ஓடிடி தளம் என இயங்கி வருகிறார்.
மேடம் சீஃப் மினிஸ்டர் படம் வெளியாகியுள்ளது. இதுபோன்ற படத்தின் கதாபாத்திரங்கள் உங்களை புரட்சிகரமான நடிகராக காட்டுகிறதேழ
மாசான் படத்திலும், கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர், பக்ரி ஆகிய படங்களிலும் நான் நடித்த கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கின்றன. நான் நடிக்கும் பாத்திரங்கள் என்னோடு உரையாடும்படி பார்த்துக்கொள்கிறேன். இந்த படத்தில் நடித்துள்ள தாரா என்ற பாத்திரமும் அப்படித்தான். முதல்வராவது இவளின் ஆசை.
இவர் எந்த அரசியல்வாதியை மையமாக கொண்டுள்ளவர் என்று கூட சர்ச்சை எழுகிறதே?
நிஜ சம்பவங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்தில் நுணுக்கமாக இருக்கும். இயக்குநர் எட்டு ஆண், பெண் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார்.
நான் மக்கள் ஒருவரின் பாத்திரத்தை இன்னொருவருடன் ஒப்பிட்டு புரிந்துகொள்வதை ஏற்கிறேன். ஆனால் இக்கதாபாத்திரம் குறிப்பிட்ட ஒருவரை நோக்கியது அல்ல.
சமூகம் அரசியல் ரீதியாக நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள். அதுதான் உங்களை கலைஞராக மாற்றியதா?
இருபத்தைந்து வயது வரை எனக்கு அரசியல் பற்றி ஏதும் தெரியாது. அதன் தாக்கம் என்மீது இல்லை. நான் ஹிப்பி போல வாழ்ந்து வந்தேன். அரசியல் என்பதே எரிச்சலூட்டும் ஒன்றாக வெறுக்கவேண்டியதாகவும் நினைத்தேன். பிறகு அனைத்தும் மாறின. ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் குரல் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை நான் உணர்ந்துள்ளேன். நடிகராக மக்களின் நிஜ வாழ்க்கையிலிருந்து நான் நிறைய விஷயங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். அதுதான் இந்த படத்தில் நடிக்கவும் காரணம்.
நீங்கள் ஓடிடி தளத்தில் நடித்து வரும் தொடக்க நட்சத்திரம். பலருக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறீர்கள். இன்சைட் எட்ஜ் அப்படி நடித்து வெற்றி பெற்ற தொடர். இதை பலரும் விமர்சனம் செய்கிறார்களே?
நான் இன்சைட் எட்ஜில் நடித்தபோது, மக்கள் அதனை பெரிதாக எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பெற்றோர் காலம் டிவி சார்ந்தது. இன்றைய இளைஞர்கள் அதனை பார்ப்பதில்லை. ஓடிடி இருதரப்பினருக்கும் பாலமாக உள்ளது.
சுகானிசிங்
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக