பெமினா - தலைமைத்துவ ராணிகள் - நடிகை , தொழிலதிபர், எழுத்தாளர்
தலைமைத்துவ ராணிகள்!
சாய் தம்ஹாங்கர்
திரைப்பட நடிகை
இவர் விருது பெற்ற நடிகை என்பதோடு மட்டுமல்லாமல் மாநில அளவிலான கபடி விளையாட்டு வீரர். தற்போது தொழில்முனைவோராகவும் செயல்பட்டு வருகிறார். சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் கூட அதனை அவர் தனக்கான பெரிய வாய்ப்பாக கருதுவதில்லை.
பொழுதுபோக்குத்துறை தன்னைத் தேர்ந்தெடுத்தது என்று கூறுகிறார். கல்லூரியில் படித்தபோது நாடகத்தில் நடித்தவர் பின்னாளில் சினிமாவில் நடித்தபோதும் தான் செய்யும் விஷயங்களை தனித்தன்மையுடனும் விருப்பத்துடனும் செய்து வந்திருக்கிறார். கல்லூரி காலத் தோழியின் உதவியுடன் சாரி ஸ்டோரி என்ற கடையைத் தொடங்கியுள்ளார். புடவை என்பது இந்தியப் பெண்களின் தனித்தன்மையை உலகிற்கு சொல்லுவது என தனது தொழில்முயற்சியை விவரிக்கிறார்.
இவரை நாம் இங்கு எழுதுவதற்கு காரணம், இவரால் பல்வேறு செயல்பாடுகளை செய்யமுடிகிறது என்பதும் அதனை சிறப்பாக செய்துவருகிறார். கல்லூரி கால தொழில்முனைவு ஐடியாவை தான் சினிமாவில் சிறப்பாக நடித்தாலும் கூட பின்பற்றி வருகிறார். படங்கள், புகைப்பட படப்பிடிப்பு, தொழில் என பல்வேறு விஷயங்களை கவனித்து செய்வது கடினமானது என்பதை நேரடியாகவே ஒப்பு்க்கொள்கிறார் சாய். பொதுமுடக்க காலத்தில் குடும்பத்தின் பெருமையை உணர்ந்துள்ளேன். நான் எனக்கென தனியாக குடும்பத்தை உருவாக்கி்க்கொள்வேன். நான் தற்போது அதைப்பற்றி யோசித்து வருகிறேன் என்கிறார் சாய் தம்ஹாங்கர்.
பெமினா
லைலா பூனாவாலா
தொழிலதிபர், வள்ளல்
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பை வெற்றிகரமாக முடித்த இரண்டாவது பெண்மணி இவர். ஆண்கள் மட்டுமே வெற்றிகரமாக இருந்த தொழில்துறையில் பெண் இயக்குநராக உயரம் எட்டியவர். ஆல்ஃபா லாவல் என்ற நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் லைலா. தனது தொழில்திறனுக்கு ஸ்வீடன் நாட்டு மன்னரிடம் விருது பெற்றிருக்கிறார். பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். இவர் தனது சொந்த ஆலோசனை நிறுவனமான லைலாவை வெற்றிகரமாக நடத்திவருகிறார். முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், அறிவியல் ஆலோசனைக் குழு கமிட்டியின் உறுப்பினராக உள்ளார். வேர்ல்டு வைல்ட்லைஃப் ஃபண்ட் புனே கமிட்டி உறுப்பினராக உள்ளார்.
அறிவியல், சமூகம், தொழில் என பல்வேறு துறைகளில் சாதனை செய்த லைலா லேடி ஆப் தி டிகேட், தி வுமன் ஆப் தி இயர் என்ற விருதுகளைப் பெற்றுள்ளார். லைலா பூனாவாலா பௌண்டேஷனைத் தொடங்கி பெண்கல்விக்கான முயற்சிகளை செய்து வருகிறார். இரண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வாங்கியுள்ளார்.
பெமினா
டிம்பிள் சோம்ஜி
எழுத்தாளர், கல்வியாளர், தொழில்முனைவோர்
2016ஆம் ஆண்டு வித் லவ் ஃபார் யூ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். சேவைகள் என்பதை வாழ்க்கை முறையாக மாற்றுவோம் என்பதை லட்சியமாக கொண்ட நிறுவனம் இது. பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளார் டிம்பிள் சோம்ஜி. இவரை் லவ் தை நெய்பர்.. காட் என்ற சுயசரிதை நூல் எழுத்தாளராக்கியது. காதலை நாம் உலகம் முழுக்க கொண்டு சென்று கூறவேண்டும் என்று நினைத்தேன். இதற்காகவே இந்த நூலை நான் எழுதியுள்ளேன்.
எனக்கு எந்த அங்கீகாரங்களும் உழைப்பின்றி வெள்ளித்தட்டில் வைத்து கொடுக்கப்படவில்லை. எனது கனவுகளை நிஜமாக்க கடுமையாக உழைத்து வருகிறேன். உழைத்துள்ளேன் என்று எழுதியுள்ளார்.
சிறந்த தலைவர்கள் அவர்களை தலைவர் என்பதால் அவர்களின் செயல்பாடுகள் சிறப்படைவதில்லை. அவர்கள் தங்கள் செயல்பாடுகளில் வேறுபாட்டைக் கொண்டுள்ளார்கள் நாம் என்ன பதவியை ஏற்றுள்ளோம் என்பதல்ல. என்ன இலக்கை கொண்டுள்ளோம் என்பதே முக்கியம். என தலைமைத்துவம் பற்றி மூச்சுவிடாமல் பேசுகிறார்.
பெருந்தொற்று காலத்தில் நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டுவிட்டேன். நான் திட்டமிட்டதை விட பல்வேறு விஷயங்களை திறன்களை இக்காலத்தில் கற்றுக்கொள்ள முடிந்த து. அப்படியே வாழ்க்கை செல்லும் விதமாக நானும் செல்கிறேன்.
பெமினா
கருத்துகள்
கருத்துரையிடுக