அந்தரே எனும் இலங்கை விகடகவி செய்யும் கோமாளித்தனங்கள்! அந்தரே கதைகள் - மாத்தளை சோமு
அந்தரே கதைகள்
மாத்தளை சோமு தொகுத்துள்ள கதைகள் இவை. இலங்கையில் அரசு ஆண்ட ராஜசிங்கன் என்ற மன்னரின் அமைச்சரவையில் விகடகவியாக பணியாற்றியவர் அந்தரே. அவரது செயல்பாடுகள் ஏறத்தாழ தெனாலிராமன், பீர்பாலை ஒத்துள்ளன. அந்தரே பற்றிய கதைகள், சிங்களம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன.
மாத்தளை சோமு தொகுத்துள்ள இக்கதைகள் குறைவானவைதான். நூல் மொத்தம் 68 பக்கங்கள், இதில் அனைத்து கதைகளும் அவரின் புத்திசாலித்தனத்தை நமக்கு கூறும் கதைகள் கிடையாது கருப்பு யானை வெள்ளை யானை கதையில் மன்னரிடம் திட்டு வாங்கி அவமானப்படுவது, தாயிடம் பலகாரம் திருடி திட்டு வாங்குவது, மனைவியை செவிடு என அறிமுகப்படுத்துவது நிறைய கதைகள் அந்தரேவை மாறுபட்ட ஒருவராக காட்டுகின்றன.
சிறிய எளிமையான கதைகள் என்பதால் எளிமையாக வேகமாக வாசித்துவிட முடியும். கதைகள் முடியும்போது அந்தரே வயதாகி இறந்துவிடுகிறார். அவர் இறந்து கிடக்கும் நிலையும் கூட ஒருவருக்கு சிரிப்பு வரும்படி உள்ளது என கதையை முடித்திருக்கிறார்கள். விகடகவி என்றால் எப்போதும் பிறரை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைப்பவன் என்று கூறுவார்கள். இந்த கதை தொகுப்பில் அந்தரே என்பவன் தன் இயல்பான தன்மையோடு இருப்பதாக கதையை எழுதியுள்ளனர். அதுதான் தெனாலிராமன், பீர்பால் ஆகிய பிரபலமான கதாபாத்திரங்களிடமிருந்து அந்தரேவை வேறுபடுத்துகிறது.
அமளிதுமளியான நூல்
கோமாளிமேடை டீம்
நூலகம்.ஆர்க்
நன்றி கணியம் சீனிவாசன்.
கருத்துகள்
கருத்துரையிடுக