சினிமா, வெப் சீரிஸ் எதில் நடித்தாலும் தரமான கதைகளைப் பார்த்து நடிக்க வேண்டும்! - சயீப் அலிகான், இந்தி நடிகர்
சயீப் அலிகான்
அமேசானில் தாண்டவ் வெப் சீரிஸ் செய்கிறீர்கள். அரசியலை மையமாக வைத்த வெப்சீரிசில் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்.
அதிலுள்ள அரசியல்தான் நான் அதனை ஏற்க காரணம். அரசியலை நாம் பேசுகிறோம். அதன் ஒரு பகுதியாக இருக்கிறோம். நமது வாழ்வாகவும் அதுவேதான் இருக்கிறது. வணிகமுறையில் தாண்டவ் வெப்சீரிசில் நாங்கள் அரசியலைப் பேசியுள்ளோம். இதில் சில நாடகத்தனங்கள் இருந்தாலும் நிஜமான மனிதர்கள் இந்தளவு செய்வார்களா என்று தெரியவில்லை.
வெப்சீரிஸ், சினிமா என இரண்டிலும் நடிக்கும் மிகச்சில
நடிகர்களில் நீங்களும் ஒருவர்.
நான் சேக்ரட் கேம்ஸ் வெப் படத்தில் நடிக்கும்போது எனக்கு தெரிந்த தயாரிப்பாளர் எனது வாழ்க்கை இணையத்தொடர்களோடு முடிந்துவிடும் என்று கருத்து சொன்னார். சின்ன ஐடியாவை வைத்து சிறப்பாக பல்வேறு தொடர்களை படங்களை இணையத்தில் எடுக்கிறார்கள். நீங்கள் அதன் தரத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான். முக்கியமான இயக்குநர்களே இணையத்தில் ஏராளமான படங்களை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு என்னென்ன நூல்களை படித்தீர்கள்?
நான் நிறையப்படித்தேன். சார்லஸ் டிக்கன்ஸின் சிறுகதைகளைப் படித்தேன். எம்.ஆர். ஜேம்ஸின் நூல்கள், சில பேய்கதைகளையும் படித்தேன். தைமூருக்கும் அவை பிடித்திருந்தன.
நீங்கள் நினைவுக்குறிப்பாக நூல் ஒன்றை எழுதுவதாக சொன்னீர்கள்.
ஒருவருக்கொருவர் பேசுவது போன்ற முறையில் அமைந்த நூல் அது. நான் போர்டிங் ஸ்கூலில் படிப்பது தொடங்கி பல்வேற சம்பவங்களை உள்ளடக்கிய நூலாக இந்தியாவின் மாற்றங்களை பேசுவதாக நூல் அமைந்திருக்கும்.
சுகானி சிங்
இந்தியாடுடே
கருத்துகள்
கருத்துரையிடுக