கொரோனாவை தீரத்துடன் எதிர்த்த வீரர்கள்!

 

 

 Superhero, Mask, Protection, Superman, Virus

 

 

காவல்துறை உங்கள் நண்பன்!


நிஷா சாவன்


காவல்துறை துணை ஆய்வாளர்

மும்பை


புனேவிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் நிஷா சவான். இவர், வாசி எனுமிடத்தில் தங்கியிருந்து கேர்வாடி காவல்நிலையத்திற்கு வந்து துணை ஆய்வாளராக பணிசெய்துகொண்டிருந்தார். ஒருநாள் கணவரால் வன்முறையாக தாக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பதிவு செய்துகொண்டிருந்தார். புகார் கொடுத்த பெண் மாஸ்க் அணியவில்லை. அதை அப்போது பெரிதாக நிஷா எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சில நாட்களில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு என உறுதியானது. அடுத்தடுத்த நாட்களில் நிஷாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இவற்றை தனது பெற்றோருக்கு அவர் கூறவில்லை. பதினெட்டு நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்று வந்திருக்கிறார்.


நோயிலிருந்து குணமாகி வந்த நிஷா, காலை எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை இரண்டு மணி வரை டூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புனேவிலிருந்து உத்தரப்பிரத்தேசம், ராஜஸ்தானுக்கு ரயில், பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்கு முன்னர் அவர்கள் பத்து பேர்களை குழுவாக பிரித்து அவர்களின் பெயர், செல்போன் எண் ஆகியவை பெறப்பட்டன. இதற்காகவே கேர்வாடி காவல்நிலையத்தில் 12 பேர் என ஆட்கள் நியமிக்கப்பட்டனர். இப்பணிகளோடு பொதுமுடக்க காலகட்டத்தில் விதிகளை பிரசாரம் செய்வது, மக்களை கண்காணிப்பது ஆகிய பணிகளையும் நிஷா தனது குழுவினரோடு செய்துவந்தார். கொரோனா பரவிய வேகத்திற்கு காவல்துறையினரும் தப்பவிலை. நிஷாவின் குழுவினரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போதுதான் மீண்டு வந்துள்ளனர்.



இறுதி மரியாதை!


ஜிதேந்தர் சிங் சுண்டி


ஷாகீத் பகத் சிங் சேவாதள்



கொரோனா நோய்த்தொற்று வந்து இறந்தவர்களை மக்களே அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுத்த அவலம் நாடெங்கும் நடைபெற்றது. அந்தளவு இந்த நோய்த்தொற்று மக்களின் பயத்தை தூண்டிவிட்டிருக்கிறது. அதற்காக நோயால் இறந்தவரின் உடலை தெருவில் இழுத்துப் போட்டுவிட்டு சென்றுவிடமுடியுமா? ஜிதேந்தர் சிங், டில்லியைச் சேர்ந்தர். தனது சேவாதள் நிறுவனம் மூலம் நோய்த்தொற்றால் இறந்தவர்களை முறைப்படுத்து எடுத்து அடக்கம் செய்துள்ளார்.


கடந்த சில மாதங்களில் ஜிதேந்தர் சிங் குழுவினர் 200க்க்கும் மேற்பட்ட உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். இதயத்திலிருந்து செய்வது அனைத்துமே சேவைதான். நோய்த்தொற்று ஏற்படுத்திய பீதியால் பலரும் தங்கள் அன்புக்குரியவர்கள் முறைப்படி அடக்கம் செய்யமுடியவில்லை. இதன் காரணமாக, நாங்கள் சிதைவடைந்த உடல்களைக் கூட எடுத்து அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது. நாங்கள் முறைப்படியான பாதுகாப்பு நடைமுறைகளை செய்துவிட்டே அவர்களை அடக்கம் செய்தோம். உடலை கொண்டு சென்ற வாகனங்களையும் முறைப்படி சுத்தம் செய்துள்ளோம் என்றார் ஜிதேந்தர்.


அப்படியிருந்தும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து மீண்டும் தனது சேவைகளை தொடர்ந்துள்ள ஜிதேந்தரின் பணி, மறக்கமுடியாதது.




பஸிரா போபுல்

போலியோ விழிப்புணர்வாளர்


ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பஸிரா போபுல், கடந்த நான்கு ஆண்டுகளாக போலியோ தொடர்பாக வீடுதோறும் சென்று விழிப்புணர்வு செய்து வருகிறார். போலியோ விழிப்புணர்வாளராக பணிசெய்துவந்த பஸிரா கோவிட் -19 காலத்தில் அந்நோய்த்தொற்று தொடர்பான பணியையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டிருக்கிறார். போலியோ தடுப்பூசி தொடர்பான பணிகளை நிறுத்திவைக்க அரசு உத்தரவிட்டதால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வழிகளாக சோப்புகளை வீடுதோறும் விநியோகம் செய்து வருகிறார். இவரைப் போல ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இப்பணியை நாடு முழுக்க செய்து வருகின்றனர்.




https://www.gatesnotes.com/Health/7-unsung-heroes-of-the-pandemic






ஷில்பாஶ்ரீ

கோவிட் -19 சோதனையாளர்


பெங்களூருவைச் சேர்ந்தவர் ஷில்பாஶ்ரீ. இவர் கோவிட் -19 சோதனையாளராக பணியாற்றி வந்தார். பிபிஇ உடை, கண்ணாடிகள், கையுறைகள், மருத்துவக்கருவிகள் என சோதனை செய்யும் பூத்தில் அமர்ந்து மக்களிடம் மாதிரிகளை சேகரித்தார். இரண்டு முழங்கைகளை நீட்டி அனைத்து மக்களிடமும் சளி மாதிரிகளை பெற்று வந்தார். நோய்த்தொற்று அதிகமாக பரவி வந்ததால் அரசு, இவரை குடும்பத்தினரை சந்திக்கச்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஐந்து மாதங்களாக தனது குடும்பத்தினரை ஷில்பாஶ்ரீ சந்திக்கவில்லை. சந்திக்க வில்லை என்றால் நேரடியாகத்தான். வீடியோ அழைப்பு வழியாக குடும்பத்தினரை சந்தித்து முகம் பார்த்து மறக்காமலிருக்க பேசிக்கொண்டனர். குழந்தைகளைப் பார்த்தும் பிரியமாக கட்டிக்கொள்ள முடியவில்லை என்பது அவரது குறை. பணி பற்றி குறைபட்டுக்கொள்கிறீர்களா? இல்லை மக்களை ஆபத்திலிருந்து காக்கிறோம் என்ற பெருமையை மறக்க முடியாது. நான் விரும்பித்தான் இந்த வேலையை செய்கிறேன் என்றார் ஷில்பாஶ்ரீ












கருத்துகள்