நண்பர்கள் இறப்பைக் கண்ணில் பார்த்தும் கடமையில் தவறாமல் கடிதங்களை, மருந்துகளை வீடுகளுக்கு விநியோகித்த தபால்காரர்!
அஞ்சல் வழியாக நம்பிக்கை!
பிரதீப் சாகு
அஞ்சல்துறை ஊழியர், மும்பை
அஞ்சல்துறை ஊழியர்கள் கொரோனா காலம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு கொண்டு சென்று கொடுத்து உதவியுள்ளனர்.
54 வயதாகும் சாகு, இந்தியா போஸ்டில் இருபத்தைந்து ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார். திலக் நகர், செம்பூர், கோவண்டி, கர்லா என மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களுக்கு சைக்கிளில் கடிதங்கள் விநியோகித்து வந்தார். அங்கு வாழும் மக்களுக்கு மிகவும் அறிமுகமான நபராக மாறிவிட்டார் பிரதீப் சாகு.
ஆனால் கொரோனா காலம் மக்களுக்கு மட்டுமல்ல சாகுவுக்கும் பயம் ஏற்படுத்திய காலமாகவே உள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாகு நோய்த்தொற்று பயம் விலகாமலேயே வேலை செய்து வந்துள்ளார். அவரின் நண்பர்களை கொரோனாவுக்கு பலிகொடுத்தும் கூட பணியை கைவிடமுடியாமல் செய்தே ஆக வேண்டிய சூழல். இந்தியா போஸ்ட் நிறுவனம், கிராம ப்புறங்களில் அமைந்துள்ள பெரிய வலைப்பின்னலான அமைப்பு. மொத்தம் 1,56, 600 அஞ்சல் கிளைகள் நாடெங்கும் அமைந்துள்ளன.
அரசின் நிதியுதவி, பாதுகாப்பு சாதனங்களை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கும் பணியை சாகுவும் அவரது சக நண்பர்களும் செய்து வந்துள்ளனர். அவசரம் இல்லாத கடிதம், பார்சல்களை அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து வாங்கிச்செல்ல கூறியுள்ளனர். இதற்கு கடித உறைகளில் உள்ள தொலைபேசி எண்களை பயன்படுத்திக்கொண்டுள்ளனர். இப்படி தினசரி 40 கடிதங்கள் வந்துள்ளன. அவருடன் வேலைசெய்த சக நண்பர் கொரோனா காரணமாக இறந்துவிட திலக் நகர் அஞ்சல் அலுவலகம் இவருக்கு 15 நாட்கள் மருத்துவ விடுப்பு கொடுத்துள்ளது. இதில் இவர் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும். பாதுகாப்பு வசதிகளுடன் ஜூன் மாதம் முதலே அனைத்து ஊழியர்களும் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். பதினொரு பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் அனைத்து வேலைச்சுமைகளையும் சாகு மற்றும் அவரது சகாக்களின் தலையில் விடிந்தன. இதனால் அங்குள்ள இளைஞர்களை தினசரி கூலி 400 என்று பேசிக்கொண்டு வேலை பார்த்துள்ளனர்.
சாகு மட்டுமல்ல ஹே தீதி எனும் சேவை அமைப்பும் கூட வீடுகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது. காவல்துறையினர் இந்த அமைப்பினரைப் பார்த்து முதலில் கேள்வி கேட்டாலும் பின்னர் இவர்களின் நோக்கத்தை புரிந்துகொண்டு பாராட்டியுள்ளனர். இந்த அமைப்பை திரிப்தி சந்தோஷ் என்ற பெண்மணி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு பெண்களை மட்டும் பணியமர்த்தி பல்வேறு பொருட்களை வீடுகளிலுள்ள மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. பதினேழு பெண்கள் இருசக்கர வாகனங்கள், வேன்களிலும் இப்படி பணியாற்றியுள்ளனர். தினசரி 150 பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் அளவுக்கு பரபரப்பாக சுற்றி சுழன்றிருக்கிறது இவரது குழு. நெருக்கடியான காலத்தில் விதிமுறைகள் காரணமாக ஒரேயொரு பெண் என வேன்களில், இருசக்கர வாகனங்களிலும் பயணிக்க வேண்டியிருந்திருக்கிறது. அதனையும் வெற்றிகரமாக சமாளித்துவிட்டனர். இதுவரை இக்குழுவினர் ஒன்றாக சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலிருக்கிறது. இயல்புநிலை திரும்பியபிறகுதான் இவர்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
திவ்யா ஜே சேகர்
போர்ப்ஸ் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக