சினிமா, இசை அல்லாமல் பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள்! - விரிவாகும் பாட்காஸ்ட் சந்தை
பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள்!
டிவி, இணையம் வெற்றி பெற்றுள்ள நவீன காலத்திலும் பாடல்கள் அல்லாத நிகழ்ச்சிகளைக் கொண்ட பாட்காஸ்ட் சந்தை சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதிலிபி எஃப்எம் என்ற ஆப், விவசாயிகள் வாழ்க்கை பற்றி பாட்காஸ்ட் ஒன்றை வெளியிட்டது. இதனைப் படித்துவிட்டு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தங்கள் மொழிகளில் தெரிவித்திருந்தனர். 2014இல் தொடங்கப்பட்ட நிறுவனம் 2019ஆம் ஆண்டு முதல் பாட்காஸ்ட் சேவையை வழங்கத் தொடங்கியது. இந்த செயலியில் பதிவிடப்படும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கூட ரசிக்கப்பட்டு வருகின்றன.
பாடல்கள் அல்லாத பல்வேறு செய்திகளுக்கான பாட்காஸ்ட் சந்தை வளர்ச்சி பெற்றாலும் வீடியோ மீதான மோகம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக யூடியூப்பின் வளர்ச்சி 45 சதவீதம் (ஜூன், ஜூலை) வளர்ச்சியடைந்துள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கு அதிகமாக சந்தாதாரர்களை பெற்றுள்ளது. இவற்றோடு இசை சேவை செயலி நிறு்வனங்களும் அதிகளவில் உறுப்பினர்களைப் பெற்றுள்ளன.
அமேஸானின் ஆடியோபுக்ஸ், இதன் பாட்காஸ்ட் தளமாக ஆடிபில், ஸ்வீடனின் ஸ்டோரிடெல், இந்தியாவின் பிரதிலிபி, பாக்கெட் எஃப்எம் ஆகிய நிறுவனங்கள் மெல்ல வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்த நிறுவனங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக கூறவில்லை. நிறுவனங்களின் செயலிகள் தரவிறக்கப்படும் எண்ணிக்கை இதன் வளர்ச்சியை அடையாளம் காட்டுகிறது. ’’வீட்டில் வேலை செய்பவர்கள் கணினியில் அதிகநேரம் செலவிடுவதால், பாட்காஸ்ட்களை கேட்கத் தொடங்கிவிட்டனர். இயர்போன் மூலம் கேட்டுக்கொண்டே வீட்டுவேலைகளை செய்யமுடியு்ம என்பது இதன் பலம்’’ என்றார் ஆடிபில் நிறுவன தலைவரான சைலேஷ் சாவ்லானி. பிராந்தியளவிலான பாட்காஸ்ட் சேவையை காசு கொடுத்து இந்தியர்கள் கேட்கும் காலமும் விரைவில் தொடங்கலாம்.
தகவல்
ET
India is binge listenig
venkat ananth
ET magazine
கருத்துகள்
கருத்துரையிடுக