இடுகைகள்

கரூர் கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழலியலாளர்கள் படுகொலை - ஏரி ஆக்கிரமிப்பாளருக்கு நேர்ந்த கொடூரம்!

படம்
அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை! மேலே சொன்ன அப்பர் பெருமானிம் வரிகளை மனதில் கொண்டுதான் தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே சூழலியலாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், குற்றவாளிகளும் கைகோத்து செயற்படுவதால், இயற்கையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் பலியாகி வருகிறார்கள். அண்மையில் கரூர் மாவட்டத்தில் ஜூலை 29 அன்று, முத்தாலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமலை, நல்லதம்பி என்ற தந்தை - மகன் இருவரும் கொல்லப்பட்டது இப்படித்தான். ஆறுபேர் கொண்ட குழு இவர்களை வெட்டிச்சாய்த்தது. காரணம், சுலபம். ஏரிக்குச் சொந்தமான 39 ஏக்கர்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்தனர் என்று புகார் மனுவை எழுதினர். அம்மனுவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் தாக்கல் செய்த குற்றத்திற்காக கொல்லப்பட்டனர். ”அரசு பொதுச்சொத்துகளைக் காப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதனைக் காப்பாற்ற முயற்சிப்பவர்களையும் குற்றவாளிகளுடன் கைகோத்து கொல்கிறது. இதில் எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிகள் என்று எந்த வேறுபாடும் கிடையாது” என்கிறார் எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பின் தலைவரான நிர்மல். உலகளவில் கோல்