மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க் உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்? அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன். மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும். இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வ...