இடுகைகள்

க்ரீஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவ

அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி…

படம்
  அனைத்து சாலைகளும் அக்ரோபோலிஸ் நோக்கி… அமைந்துள்ள இடம் க்ரீஸ் கலாசார அங்கீகாரம் 1987 டிப்ஸ் அனைத்து இடங்களையும் பார்க்க காம்போவாக டிக்கெட் எடுத்தால் நல்லது.   க்ரீசிலுள்ள ஏதேன்ஸ் நகரம். இந்த நகரத்தை காக்கும் கடவுள் பெயர் ஏதேனா.   ஏதேன்ஸ் நகரம், அங்கு வாழும் மக்களுக்கு முக்கியமானது. வணிகம், ராணுவ அணிவகுப்பு, ஜனநாயகம் என அனைத்திற்குமானது. இங்கிருந்து நீங்கள் சுற்றுலாவை தொடங்கலாம். ஏதேன்ஸ் நகரம் , 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.   இங்குள்ள பார்த்தினோன் கோவிலில் ஏதேனாவின் பெரிய சிலை அமைந்திருந்த்து. இங்குதான் கடவுளை வணங்குபவர்கள் தங்களது பரிசுப் பொருட்களை வைப்பார்கள். பின்னாளில் ஒட்டமான், வெனிடியன் படையினர் செய்த தாக்குதலில் ஏதேனா சிலை சிதைந்துவிட்டது. அப்படி சிதைந்தும் மிச்சமிருக்கும் சிலைத்துண்டுகளை வைத்து மீதியை நீங்கள் உங்கள் கற்பனை நினைவுகளில் நிரப்பிக்கொள்ளலாம். இங்கு செல்ல முதலில் மெட்ரோ   ரயில் பிடித்து அக்ரோபோலி ரயில் நிலையத்திற்கு செல்லவேண்டும். அங்கு பார்த்தினோன் கோவிலைப் பிரதிபலிக்கும் மார்பிள் கற்களை வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே தெற்க