இடுகைகள்

புத்தக அறிமுகம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுரை நூல்கள் அறிமுகம் 2019

படம்
How to Date Men When You Hate Men by   Blythe Roberson நியூயார்க்கர் இதழில் காமெடிகளை கொளுத்திப்போட்டு எழுதும் ராபர்சன், ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் டேட்டிங் பற்றிய நிகழ்வுகளை காமெடியுடன் அணுகி எழுதியுள்ளார். திறந்த மனதுடன் நீங்கள் படித்தால் நூல் ருசிக்கும்.  Thick: And Other Essays by   Tressie McMillan Cottom இன்று நீங்கள் பேசும் காசு, பணம், இனவெறி என அத்தனை விஷயங்களையும் பற்றி கட்டுரை ஆசிரியர் தெளிவாக பேசியுள்ளார். கருப்பின பெண்களின் பைபிள் என சொல்லும்படி அவர்களின் நிலைமை குறித்து எழுதியுள்ளது ஈர்க்கிறது.  How to Hold a Grudge: From Resentment to Contentment—The Power of Grudges to Transform Your Life by   Sophie Hannah   பகையுணர்ச்சி என்பது தவறானது என்று பலரும் கூறியிருப்பார்கள். அதனை எப்படி வாழ்க்கைக்கு ஏற்றாற்போல ஆற்றலாக மாற்றுவது என கற்றுக்கொடுக்கிறார் சோபி ஹன்னா.  Team Human by   Douglas Rushkoff உலகில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு, மனிதர்கள் ஒன்றாக இணை

மூடநம்பிக்கைகளிலிருந்து மருத்துவம் வளர்ந்த கதை!

படம்
புத்தக கடை! The Sawbones Book: The Hilarious, Horrifying Road to Modern Medicine Justin McElroy, Sydnee McElroy 216 pages Weldon Owen கிரேக்க மம்மிகளை பொடியாக்கி தின்று நோய் தீர்ப்பது, தலையில் துளையிட்டு மைக்ரேன் தலைவலியை விரட்டுவது, கதிரியக்க பொருட்களிலான உடையை அணிந்து ஆண்மையைக் கூட்டுவது என மூடநம்பிக்கைகளிலிருந்து மருத்துவம் வளர்ந்து வந்த வரலாற்றை பேசுகிறது இந்நூல். Einstein's Monsters: The Life and Times of Black Holes Chris Impey 304 pp W. W. Norton Company வானியலாளரான கிறிஸ் இம்பெய், கருந்துகளை, ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை எளிமையாக புரியும்படி விளக்கியுள்ள நூல் இது. End of the Megafauna: The Fate of the World's Hugest, Fiercest, and Strangest Animals Ross D E MacPhee,Peter Schouten 256 pp,W. W. Norton Company சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த டைனோசர், ராட்சஷ லெமூர் உள்ளிட்ட மிருகங்களை படமாக வரைந்து விவரித்திருக்கிறார்கள். 

தமிழ்மொழியை வாசிக்க நேசிக்க உதவும் நூல்!

படம்
அறியப்படாத தமிழ்மொழி - கண்ணபிரான் ரவிசங்கர் அறியப்படாத தமிழ்மொழி கண்ணபிரான் ரவிசங்கர் எழுதிய நூல் தமிழ் குறித்து இதுவரை அறியாத பல்வேறு விஷயங்களை சுவாரசியமான மொழியில் விளக்குகிறது. தமிழ்மொழி குறித்த நூல் எப்படியிருக்கும்?  தொல்காப்பியம் முதல் கலைஞர் எழுதிய திருக்குறள் உரை வரையிலான பெருமைகளை மட்டும் பேசி நிறைவு பெறும். ஆனால் இந்த நூல் தமிழ்மொழி குறித்த கண்மூடித்தனமான நம்பிக்கைகள், பன்ச் டயலாக்குகள், தமிழ் வாழ்க முழக்கங்கள் எப்படி உருவாயின என்பதையும் அதன்மேல் ஏற்றப்பட்ட தவறான சமஸ்கிருத ஏற்றங்களையும் துல்லியமாக உடைத்து பேசுகிறது. மாயோன் சேயோன்(முருகன், திருமால்) எப்படி வரலாற்றுப்போக்கில் சுப்ரமணியன், விஷ்ணு ஆனார்கள், அவர்களுக்கான திணை என்ன, அறுபடை வீடுகள் குறித்த விளக்கங்களும் சான்றுகளோடு கொடுக்கப்பட்டுள்ளன.  பழங்குடிகளின் சிலைகள் எப்படி சிவன் என திரித்து கூறப்பட்டன என்பதோடு தமிழ்மொழியில் சமஸ்கிருதம் உள்ளே நுழைந்து அதனை கரையானாய் அரிப்பது குறித்தும் ஆசிரியர் விளக்கும்போது ஆச்சரியம் பற்றிக்கொள்கிறது. நூல் முழுக்க இணையத்தில் பதிவேற்றப்பட்டதோ என நினைக்கத்தோன்றுகிறது வரிக்

மூன்று நாட்டு அதிபர்களை ஒற்றுமையாக்கிய போர்!

படம்
புத்தக அரங்கு! The Allies: Churchill, Roosevelt, Stalin, and the Unlikely Alliance That Won World War II   Winston Groom   464 pp National Geographic பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஸ்டாலின் ஆகிய மூன்று நாட்டு அதிபர்களும் ஒன்றிணைந்து இரண்டாம் உலகப்போரை எப்படி முடிவுக்கு கொண்டுவந்தனர் என்பதை இந்நூல் விளக்குகிறது. உலகின் வரலாற்றை மாற்றிய இப்போரை நடத்திய மூன்று அதிபர்களின் அரசியல் நம்பிக்கைகள், செயல்பாடுகளை ஆசிரியர் வின்ஸ்டன் சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ள நூல் இது. A Misunderstood Friendship: Mao Zedong, Kim Il-Sung, and Sino-North Korean Relations, 1949-1976 Zhihua Shen 352 pp Columbia University Press சீனாவின் மாவோ – வடகொரியாவின் கிம் சுங் ஆகியோருக்கிடையேயான உறவு எப்படி இன்றுவரையும் அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டு தொடர்கிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.  

வீகன் உணவுப்பழக்கத்திற்கான காரணம் என்ன?

படம்
புத்தகம் பேசுது! Down Girl: The Logic of Misogyny   Kate Manne ,368 pp Oxford University Press உலகமெங்கும் அதிகரித்து வரும் பெண்வெறுப்புதான் இந்த ஆண்டின் ஹாட் டாபிக். பெண்வெறுப்பின் மூலம், அரசியல், சினிமா, தொழில்துறையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதை கார்னெல் தத்துவப் பேராசிரியர் கேட் மனே இந்நூலில் சமகால உதாரணங்களுடன் விளக்கியுள்ளார். The End of Animal Farming: How Scientists, Entrepreneurs, and Activists Are Building an Animal-Free Food System Jacy Reese ,240 pps Beacon Press பாரம்பரிய இறைச்சி உணவுக்கு மாற்றாக தொழில்நுட்பத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் உணவுகளை அறிமுகப்படுத்தி, இதற்கான சமூக காரணங்களை விளக்குகிறார் ஆசிரியர் ஜேசி ரீஸ். வீகன் உணவுப்பழக்கம் அதிக மக்களை ஈர்ப்பதற்கான காரணங்களை சமூக காரணங்களுடன் இணைத்து பேசியுள்ளார் ஆசிரியர்.

உலகின் வளர்ச்சி பற்றி குறிப்புகள்!

படம்
புக் கார்னர்! Enlightenment Now: The Case for Reason, Science, Humanism, and Progress Steven Pinker 576pp, Viking 17-18   ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாற்றிலிருந்து இன்று நாம் பெற்றிருக்கும் அறிவியல் வளர்ச்சி, சமநிலையற்ற இனக்குழுக்கள், வெப்பமயமாதல், பிரிவினை தலைவர்கள், வலதுசாரி எழுச்சி ஆகியவற்றை பற்றிய உண்மைகளையும் செய்யவேண்டிய மாற்றங்களைக் குறித்தும் எக்கச்சக்க ஆதாரங்களுடன் பேசுகிறார் அறிவியலாளர் பிங்கர். Bad Blood: Secrets and Lies in a Silicon Valley Startup John Carreyrou 352 pp Knopf Publishing Group அமெரிக்காவின் சிலிக்கன் வேலியில் நடக்கும் ஸ்டார்ட்அப் மோசடிகள், அதிர்ச்சிகர செயல்பாடுகளை பற்றி ஆசிரியர் ஜான் கேரிரூ விவரித்துள்ளார். மோசடி நிறுவனமான என்ரான் போல ரத்தசோதனை டெக் நிறுவனமான தெரனோஸ், செய்த பலகோடி ரூபாய் மோசடி வரலாற்றில் இடம்பெறும் தன்மை கொண்டது.