இடுகைகள்

வருவாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓடிடி பிளாட்பாரங்களுக்கான தணிக்கை தடை பாதிப்பை ஏற்படுத்துமா? டேட்டா கார்னர்

படம்
                  நவம்பர் 9 அன்று , இணையத்தில் வெளியாகும் படங்கள் , பாடல்கள் , பேச்சு உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இதனை தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை கட்டுப்படுத்தும் . இதன் கீழ் இனி அனைத்து ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்களும் , சமூக வலைத்தளங்கள் , இணையதளங்கள் வரும் . இந்த நிறுவனங்கள் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த வகையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே இவற்றில் இருக்கும் . மேற்கண்ட முதலீட்டிற்கு மேல் உள்ள செய்தி நிறுவனங்ளள் இதுபற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும் . இதில் நிறுவனத்தின் இயக்குநர் , தலைவர் , உறுப்பினர்கள் என பல்வேறு விவரங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அக்டோபர் 15, 2021 ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு காலவரம்பு நிர்ணயித்துள்ளது . இதுபற்றி டிஜிபப் நிறுவனம் , மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கிறது . அரசின் இதுபோன்ற

உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை இயற்கைதான்!

படம்
pixabay உலகளவில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் இயற்கையான சூழலை அழித்து அதில் பெரும் கட்டுமானங்களை நிறுவுவதாகவே இருக்கின்றன. இத்தொழிற்சாலைகளும் கூட இயற்கையான கனிமங்களை நம்பியே உருவாகின்றன. அல்லது அவற்றிலிருந்து புதிய பொருட்களை உருவாக்குவதாக உள்ளன. உலக பொருளாதார அமைப்பு இதுபற்றிய அறிக்கையில் இயற்கையைச் சார்ந்தே உலக நாடுகளின் பொருளாதார வலைப்பின்னல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இயற்கை ஆதாரங்களை சார்ந்துள்ள நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 44 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு 86 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். உலகளவில் இயற்கையைச் சார்ந்துள்ள மூன்று துறைகள் கட்டுமானத்துறை 4 ட்ரில்லியன் டாலர்கள் விவசாயத்துறை 2.5 ட்ரில்லியன் டாலர்கள் உணவு மற்றும் குளிர்பானங்கள் துறை - 1.5 ட்ரில்லியன் டாலர்கள் இயற்கையோடு சம்பந்தப்படாத சில துறைகளும் உண்டு. அவை விமானத்துறை, வேதிப்பொருட்கள், சுற்றுலாத்துறை. ரியல் எஸ்டேட், சுரங்கம், உலோகம், நுகர்பொருட்கள் ஆகியவை மறைமுகமாக இயற்கையைச் சார்ந்துள்ளவ

ஸ்மார்ட்மீட்டர் மின்சார சேவையை ஒழுங்குப்படுத்தும்!

படம்
2017ஆம்ஆண்டு இந்திய அரசு, ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியது. இதன்விளைவாக, எல்இடி விளக்குகளின் விலையை 80 சதவீதம் அளவுக்கு குறைத்தது. சாதாரண மின் மீட்டர்களை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.அது மின்கட்டணத்தை அளவிடுவதற்காக இருக்கும். ஸ்மார்ட் மீட்டர் உங்களது மின்பயன்பாடுகளை அளவிட்டு அதற்கான தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்வோம். எதற்கு இப்படி சேகரிக்கவேண்டும் என கேள்விகள் எழலாம். மின்சார சேவைகளை வழங்கும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மின்சார வீணடிப்பால் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. இதனை தீர்க்கவே ஸ்மார்ட் மீட்டர் எனும் முயற்சி. இதற்காக தொடங்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இயக்குநர், சௌரப் குமார் இதுபற்றி பேசினார் இத்திட்டம் பற்றி விளக்குங்கள். நாங்கள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை இந்தியாவிலுள்ள டில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா ஆகிய இடங்களில் நிறுவியுள்ளோம்.  நாங்கள் டில்லியில் மட்டும் பத்து லட்சம் மீட்டர்களை நிறுவியுள்ளோம். பீகாரில் இப்போதுதான் பணிகளைத் தொடங்கியுள்ளோம். உத்தரப் பிரதேசத்தில் ஐந்து நிறுவனங்கள் மூலம் மீட்டர்களை நிறுவி வருகிறோம். ஸ்மார்ட் மீட்