இடுகைகள்

விஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களை தப்பிக்க வைக்க உதவும் பொருட்கள்! - கிண்டில் பேப்பர்வொயிட், ஆக்குலஸ், சோனி ஹெட்போன், எக்ஸ்பாக்ஸ், நின்டெண்டோ

படம்
  ஆக்குலஸ் க்வெஸ்ட் 2 முதலில் வெளியான விஆர் ஹெட்செட்டை விட சிறப்பாக இருக்கிறது. மேலும் இதில் வயர் கிடையாது என்பதால்,  கம்ப்யூட்டர் கன்சோல் என எதிலும் சிக்க வேண்டியது இல்லை. ஜாலியாக சூழலிலிருந்து தப்பி இன்னொரு உலகிற்கு செல்லலாம். இதன் நினைவகமும் 64 லிருந்து 128 ஜிபியாக மேம்பட்டுள்ளது.  விலை 29,900 நின்டெண்டோ ஸ்விட்ச் இதனை விளையாட பெரிய ஓஎல்இடி திரை எல்லாம் தேவையில்லை. எடுத்து டிவியில் பொருத்தி விளையாட வேண்டியதுதான். ப்ரீத் ஆப் தி வைல்ட், மெட்ராய்ட் டிரெட் ஸெய்டா என ஏகப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. விளையாட்டுத்தனம் கொண்டவர்களுக்கும் சிறுவர்களுக்கும் பொருத்தமான சாய்ஸ் இது.  விலை 25,900 எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் தரத்தில் இதனை அடித்துக்கொள்ள முடியாது. இப்போது நெட்பிளிக்ஸில் கூட கேம்களை கொடுக்க தொடங்கிவிட்டார்கள். இதையும் எக்ஸ்பாக்ஸ் சமாளித்துத்தான் ஆகவேண்டும்.  8 கே தரத்தில் விளையாட்டுகளை விளையாடலாம். மைக்ரோசாப்டின் பெஸ்ட் கன்சோல் என்று இதனைக் கூறலாம்.  விலை 49,900 சோனி டபிள்யூஹெச் 1000 எக்ஸ் எம்4 இரைச்சல் குறைவாக கேட்கும் ஹெட்போன். ஆகாய விமானத்தில் சென்றால் கூட அதன் இரைச்சலை மிகவும் மட்டுப்படு

உலகை மாற்றும் 2020 தொழில்நுட்பங்கள் இவைதான்!

படம்
pixabay உலகம் நொடிக்கு நொடி மாறி வருகிறது. தலைமுறையாக செய்து வந்த தொழில்கள் இன்று இழுத்து மூடப்படுகின்றன. பெரும்பாலான தொழில்கள் இணையம் சார்ந்து இயங்கத் தொடங்கியிருக்கின்றன. பல்வேறு தொழிற்கூடங்களில் ஆட்டோமேஷன் நுட்பம் இயக்கப்படத் தொடங்கிவிட்டார்கள். செயற்கை நுண்ணறிவும் வேகம் கொள்ளத் தொடங்கி உள்ளது., இதனால் வேலை இழப்பு அபாயமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. புத்தாண்டில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மிக்ஸ்டு ரியாலிட்டி பிளேடு ரன்னர் படத்தில் ஏஜண்ட் கே, தன் செயற்கை நுண்ணறிவுத்தோழன் ஜோய் உடன் பேசுவது போல காட்சி அமைத்திருப்பார்கள். நிஜமும் அதுதான். தற்போது டிவிகளில் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றை பாப்கார்ன் கொரித்தபடி பார்க்கிறோம். அடுத்த வரவிருக்கும் ஆண்டுகளில், விஆர் ஹெட்செட்டில் அதே விளையாட்டை நாமும் விளையாடியபடி இருப்போம். சூழல் அந்தளவு நெருங்கிவிட்டது. மும்பையைச் சேர்ந்த டெசராக்ட் என்ற மிக்ஸ்டு ரியாலிட்டு தொழில்நுட்ப கம்பெனியை ஜியோ நிறுவனம் வாங்கியுள்ளது இதையே காட்டுகிறது. இத்துறையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இமேஜினேட் என்ற நிறுவனமும் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளத