முடியை சீவும்போது ஏற்படும் வலி, சோப்பு போட்டு கைகழுவினால் கூட நீங்காத பாக்டீரியா
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பள்ளிகளில் இடைவேளை விடுவது ஆக்கப்பூர்வமான விளைவை தருகிறதா? ஆங்கிலத்தில் ரீசஸ் என இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இடைவேளை என்பது உடற்பயிற்சிக்கானது அல்ல. இந்த நேரத்தில் மாணவர்கள் தங்களுக்கு பிடித்து ஊக்கமூட்டும் எதையேனும் செய்யலாம். உடலும் மனமும் ஒத்திசைவாக இருக்க ஓட்டம் கூட உதவக்கூடியதுதான். மனம் அமைதியாக இருக்கும்போதுதான் நிறைய விஷயங்களைக் கற்க முடியும். ஆபத்து நெருக்கடியை உணரும்போது மூளை சிறப்பாக செயல்படுகிறது. அதேசமயம், எதிர்பார்ப்புகள் உள்ளபோது வரும் ஏமாற்றம் கடுமையாக மனதைப் பாதிக்கிறது. இதை பின்னடைவு தோல்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம். பொதுவாக குழந்தைகள் கிடைக்கும் இடைவேளையில் அனைவருடனும் பேசி விளையாட்டில் ஈடுபட்டாலே அவர்களது மனம், உடல் என இரண்டுமே வளம்பெறும். ஆகவே, குழந்தைகள் மூச்சுவிட சற்று இடைவேளை விடலாம் கல்வியாளர்களே! சோப்பு போட்டு கைகழுவினால் கூட பாக்டீரியா கைகளில் இருக்குமா? ஆன்டி செப்டிக் சோப்பு விளம்பரங்களை மறந்துவிடுங்கள். பாக்டீரியாக்கள் எப்போதுமே நம் கைகளில் இருக்கும். அவற்றில் சில மட்டுமே கைகழுவும்போது ந...