சீரியல் கொலைகாரனிடமிருந்து தங்கையைக் காக்க போராடும் மனநல குறைபாடு கொண்ட பெண்! - ஜட்ஜ்மென்டல் ஹை கியா?
ஜட்ஜ்மென்டல் ஹை கியா ராஜ்குமார் ராவ், கங்கனா ரணாவத் இயக்கம் பிரகாஷ் கோவலமுடி கதை, திரைக்கதை, வசனம் – கனிகா தில்லான் குடும்ப வன்முறை காரணமாக சிறுவயதில் இருந்தே மனநலக்குறைபாடு கொண்டவள் பாபி. தனது பாதிப்பினூடே சீரியல் கொலைகாரன் ஒருவனை எப்படி கண்டுபிடித்து அவனிடமிருந்து தன் தங்கையைக் காக்கிறாள் என்பதே மையக் கதை. சைக்கோசிஸ் வந்த நோயாளியாக பாபி இருக்கிறாள். இவளை பைத்தியம் என்று பலரும் பேசினாலும் அவளது உலகத்தில் உள்ள பாத்திரங்களின் அடிப்படையில் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறாள். செய்யும் அதிரடி காரியங்களுக்காக நீதிமன்றம் விதிக்கும் அபராதம் கூட கட்டமுடியாத நிலை. நான் மனநல மையத்திற்கு போகிறேன். அதுதான் எனக்கு வசதியாக இருக்கும் என்று செல்பவளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? குடும்ப வன்முறை காரணமாக அவளது அப்பா, அம்மாவை அடித்து உதைத்து வசைபாடுகிறார். ஒருநாள் ஹோலி பண்டிகை அன்று இன்னொருவரோடு சேர்ந்து நடனம் ஆடினாள் என தனது மனைவியை பாபியின் அப்பா அடித்து உதைக்கிறார். அம்மா அடிபடுவதிலிருந்து காப்பாற்ற பாபி முயலும்போதுதான் பெற்றோர் மாடியிலிரு...