இடுகைகள்

மாணவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  கேலி, கிண்டல்களைத் தடுக்கும் மாணவி! ஹரியாணாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, அனுஷ்கா ஜோலி. இவர் பள்ளிகளில் மாணவர்கள் சந்திக்கும் கேலி, கிண்டல் ஆகியவற்றைத் தடுக்கும் வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.   ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், தனது பள்ளி மாணவியை,   சக வகுப்பு மாணவர்கள் பள்ளி நிகழ்ச்சியில் கிண்டல் செய்ததை அனுஷ்காவால் மறக்கவே முடியாது. இதனால்  பாதிக்கப்படும் மாணவர்களைக் காப்பாற்றவே ஆன்டி புல்லியிங் ஸ்குவாட் ( 'Anti Bullying Squad ABS)என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய டிஜிட்டல்  தீர்வு மூலம் 100 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த வலைத்தளத்திற்கான  ஆதரவையும் உதவியையும் பல்வேறு பல்கலைக்கழகங்கள்,பள்ளிகள்,  தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள்.  அனுஷ்கா, எட்டாவது படிக்கும்போதே கவச் (Kavach) எனும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்கினார். இதில், மாணவர், மாணவிக்கு நடந்த கேலி, கிண்டல் புகாரை பெயர் தெரிவிக்காமல் புகாராக பதிவு செய்யலாம். இதன் மூலம் பள்ளியில் உள்ள ஆலோசகர்கள் உடனே பாதிக்கப்பட்ட மாணவர்களைக் காப்பாற

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் - கீதாஞ்சலி ராவ்

படம்
  பிறரது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறேன்!  கீதாஞ்சலி ராவ், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க மாணவி.  அமெரிக்காவின் கொலராடோவில் ஹைலேண்ட் ரான்ஞ்சில் பள்ளிப்படிப்பு படிக்கிறார் கீதாஞ்சலி. கூடவே, கொலராடோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். தான் கேள்விப்படும் செய்தியிலிருந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவது கீதாஞ்சலியின் வழக்கம். ஜிகா வைரஸ் நோய் பரவியபோது,  ஜீன் எடிட்டிங் செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று யோசித்தார்.2014ஆம் ஆண்டு மலேசிய விமானம் காணாமல் போனபோது, கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்தார்.  அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஃபிளின்ட் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, குடிநீரில் உள்ள காரீயம் என்ற நச்சுப் பொருளைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.  அண்மையில், கைண்ட்லி (Kindly) எனும் ஆப் ஒன்றை கோடிங் எழுதி உருவாக்கியுள்ளார். இதனை ப்ரௌசரில் இணைத்து கொள்வதன் மூலம், இளம் வயதினர் சைபர் தாக்குதல்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.  இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணற

சிகரெட் அட்டைப் பெட்டிகளில் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு- அருப்புக்கோட்டை மாணவியின் புதிய ஐடியா

படம்
  மது எப்படி ஒருவரை குடிநோயாளி ஆக்குகிறதோ, அதேபோல்தான் புகைப்பிடித்தலும். சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் சிகரெட்டுகளை ஊதி தள்ளிக்கொண்டிருப்பார்கள். வெறுமையைப் போக்க என காரணம் சொல்லுவார்கள். இதனை கைவிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது அவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நல்லது.  அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி அஸ்மா அஹமது, புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கு தன்னார்வ நிறுவனமான வில் அவார்ட்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கியுள்ளது. அப்படி என்ன விஷயம் செய்தார்?  மூன்று ஆண்டுகளாக ஆயிரம் சிகரெட் அட்டைகளை பொறுக்கி எடுத்து அதன் பின்பக்கத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிரான வாசகங்களை எழுதி அதனை கண்காட்சியாக்கியிருக்கிறார். அட்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகங்களை எழுதியிருக்கிறார். ராமனாதபுரத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தின் மூலம் ஆறாவதிலிருந்து அஸ்மா செய்யும் விழிப்புணர்வு முயற்சிகள் வெளித்தெரிந்துள்ளன. இவரது புகைப்பிடித்தலுக்கு எதிரான கண்காட்சியை அவரது பள்ளியில் உள்ள 1500 மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அத்தனை குடும்பங்களி