இடுகைகள்

பதில் சொல்லுங்க ப்ரோ? ஆபரேஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது?

படம்
            பதில் சொல்லுங்க ப்ரோ ? வின்சென்ட் காபோ அனஸ்தீசியா எப்படி பயன்படுகிறது ? அறுவை சிகிச்சை செய்யப்படும்போது ஒருவருக்கு ஏற்படும் வலியைக் குறைக்க அனஸ்தீசியா பயன்படுகிறது . இதில் லோக்கல் , ஜெனரல் என இருவகைகள் உண்டு . இதில் லோக்கல் எனும் சிகிச்சை முறையில் க்ரீம் முறையில் உடல் பாகத்தில் தடவப்படுகிறது , ஊசிமுறையில் மருந்து செலுத்தப்படுகிறது . குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உணர்வுகள் மழுங்கும் . அந்த இடத்தில் கத்தியால் அறுக்கப்படும்போது வலி தெரியாது . மற்றபடி நோயாளிக்கு முழு உணர்வு நிலை இருக்கும் . ஜெனரல் முறையில் வழங்கப்படும் அனஸ்தீசியா மூளை , முதுகெலும்பை செயலற்றுபோக வைக்கிறது . மூளை முழுக்க முடக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது . இதிலும் நரம்பு செல்கள் ஒன்றையொன்றை தொடர்புகொண்டு தகவல் பரிமாற்றம் செய்வதை மருந்து தடை செய்கிறது . இதனால் அறுவை சிகிச்சை செய்பவருக்கு சுயநினைவு இருக்காது . அனஸ்தீசியா கொடுப்பதன் மூலம் ஒருவருக்கு வலி குறைவது மட்டுமன்றி , தசைகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக மாறும் . இந்த மருந்தை ஒருவர் எடுத்துக்கொள்ளும்போது அவருக்கு குமட்டல் உணர்வு ஏற்ப