இடுகைகள்

கார்த்திகேயா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளம் விதவையைக் காதலித்து அதன் வழியாக தனது அம்மாவை உணரும் பால்ராஜூ! - சாவு கப்புரு சல்லாக

படம்
  சாவு கப்புரு சல்லாக தெலுங்கு இயக்குநர் – கவுசிக் பெகல்படி இசை – ஜேக்ஸ் பிஜோய் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பஸ்தி பால்ராஜ், சாவு வீட்டில் கணவரை இழந்த பெண்ணைக் காதலிக்கிறார். இந்த காதல் இருவர் வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் ஏற்படுத்தும் விளைவுகள்தான் கதை. குடிசைப்பகுதி மக்களாக வாழ்பவர்களின் வாழ்க்கை, மத்திய வர்க்க கிறிஸ்தவர்களின் வாழ்க்கை என இரண்டையும் இயக்குநர் விவரித்துள்ளார். பஸ்தி பால்ராஜூக்கு, அவரது தாயான கங்கம்மாதான் எல்லாமே. கங்கம்மா, விசாகபட்டினம் கடற்கரையில் சோளத்தை சுட்டு வருகிறார். பால்ராஜின் அப்பா, வாதம் வந்து விழுந்து படுக்கையில் கிடக்கிறார். வீட்டுக்கான சம்பாத்தியம் என்பது கங்கம்மாவின் பொறுப்பு. பஸ்தி பால்ராஜ் , இறந்தவர்களை தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்யும் வேலையை செய்கிறார். இதில் கிடைப்பதுதான் அவரது சம்பாத்தியம். சாவு வீட்டுக்குப் போகும்போது அங்கு, இறந்த பிணத்தின் அருகே மல்லிகா என்ற இளம்பெண்ணைப் பார்க்கிறார் பால்ராஜ். உடனே, காதல் வயப்பட்டு பிணத்தை தூக்கி வண்டியில் வைக்கும் முன்னரே காதல் வயப்படுகிறார். உடலை அடக்கம் செய்துவிட

காதல் மன்னன் கல்யாண மாலைக்கு ரெடியாவதுதான் இந்த ஹிப்பி!

படம்
ஹிப்பி - தெலுங்கு டிஎன் கிருஷ்ணா ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர் இசை: நிவாஸ் கே பிரசன்னா ஆஹா பொங்கி வழியும் இளமை, திகங்கனாவின் அழகு பார்த்துக்கொண்டே இருக்கலாம். பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் பிரமாதம். நிவாஸின் இசை காதில் தென்றலாக ஒலிக்கிறது. நவீன காதலர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும், லிவ் இன் உறவையும் காட்டியிருக்கிறார்கள். நாயகிக்கு நிகராக சட்டையே வேண்டாம், என நாயகன் கார்த்திகேயா அடிக்கடை வெற்று மேலாக சுற்றுகிறார். சிக்ஸ்பேக் உடம்பு வைத்திருக்கிறார். அதற்காக சட்டையை கழற்றிப்போட்டுக்கொண்டே இருந்தால் எப்படி ப்ரோ? நாங்க ஹீரோயினைப் பார்ப்போமா இல்லை உங்களைப் பார்ப்போமா? ஹிப்பியாக தெருவில் சண்டை போட்டு கிடைக்கும் காசை பெண்களுக்குச் செலவு செய்த மஜாவாக இருக்கும் தேவா, எப்படி அமுல்யதாவிடம் காதல் சொல்லி கைமா ஆகிறார் என்பதுதான் கதை. கதையிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும் நீங்கள் இதில் என்ன எதிர்பார்க்க முடியும் என்று. அதை மட்டுமே இயக்குநர் தர முயற்சி செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோரின் காமெடி கச்சிதமாக வேலை செய்கிறது. படம் இளைஞர்களுக்கானது என்பதால், பத்தாவது படிக