இடுகைகள்

மார்க்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்சிய கொள்கை அடிப்படையில் சமூக குற்றங்களைக் காணலாம்!

படம்
  மார்க்சிய கொள்கை வழியில் கோணத்தில் குற்றத்தைப் பார்ப்பது பற்றி படித்தோம். அதிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. முதலாளித்துவ சமூகம் என்றால் குற்றம் செய்பவர்கள் அனைவருமே அந்த கருத்தில் உடன்பாடு கொண்டவர்களா, அனைத்து பிரிவினரும் குற்றம் செய்கிறார்களா என நிறைய கேள்விகளும் அதில் உண்டு. நடைமுறை யதார்த்தம் சார்ந்து கருத்துகளைப் புரிந்துகொள்வது, கருத்துகளின் அர்த்தம் அறிவது, அதிலிருந்து கற்றுக்கொள்வது, கற்றதும், பெற்றதுமான அனுபவங்களிலிருந்து ஆளுமையை உருவாக்கிக் கொள்வது ஆகியவை முக்கியமானவை. அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள்தான் சட்டங்களை உருவாக்குகிறார்கள். நேரடியாக உண்மையை எதிர்கொள்வது கடினம் என்பதால் நாம் அதை வேறுவேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறோம். உண்மையில் அதிகாரமும், பணபலமும் கொண்ட சிறுகுழுக்கள்தான் சமூகம் இயங்குவதற்கான விதிகளை வகுக்கிறார்கள். வெளியிடுவதும், நடைமுறைப்படுத்துவதும் வேறு வேறு அமைப்புகள், ஆட்கள். இப்படி அமைக்கும் சட்ட அமைப்பில் ஒருவரைக் கொல்வது என்பது சட்டப்படி ஏற்புடையதாகவும் உள்ளன. போதைப்பொருட்களை விற்பது, பெண்களை ஆபாச படம் எடுப்பது, வல்லுறவு செய்வது ஆகியவற்றில