இடுகைகள்

புறா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வியக்க வைக்கும் புறாக்களின் ஞாபகசக்தி!

படம்
  நினைவுகளை மறக்காத பறவை! தொன்மைக் காலத்தில், புறாக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்ததை பலரும் அறிவோம். புறாக்களை அக்கால மக்கள், தேர்வு செய்ததற்கு அதன் திசையறியும் திறன்தான் காரணம். ஒருமுறை பறந்த வழித்தடத்தை புறா, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் வைத்திருப்பது ஆச்சரியம்தானே? இங்கிலாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புறாவின் நினைவுகூரும் திறனை ஆய்வு செய்து வியப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.  மனிதர்கள் அல்லாத உயிரினங்களின் நினைவுகளை சோதிப்பது சவால் நிரம்பியது.  “இப்படி நடைபெறுவது மிகவும் அரிதானது. ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட தேவைப்படும்போது, அதனைப் புறா மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது  ஆச்சரியப்படுத்துகிறது” என்றார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விலங்கியலாளர் டோரா பைரோ.  2016ஆம் ஆண்டு தொடங்கி, புறாவின் நினைவுகள் பற்றிய ஆராய்ச்சியை பைரோ தலைமையிலான ஆய்வுக்குழுவினர் செய்து வருகிறார்கள். இவர்களின் ஆய்வுக்கட்டுரை, புரோசீடிங் ஆஃப் தி ராயல் சொசைட்டி என்ற இதழில் வெளியாகியுள்ளது. இக்குழுவினர் வீட்டில் வளர்க்கும் புறாக்களை 8 கி.மீ. தொலைவிற்கும் அதிகமாக தூரத்திற்கு பறக