இடுகைகள்

சபதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் சம்பாதித்தால் ஹாரிகா பரிசு! - பணம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
  பணம்  எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் கௌரி கிருபானந்தன் அல்லயன்ஸ் வெளியீடு நூலின் அட்டையைப் பார்த்து அதனை பற்றி முடிவெடுக்க கூடாது என்பதற்கு இந்த நூல் சாலப் பொருத்தமானது. அட்டை கண்ணாடிக்கல் மாறி தெரிந்தாலும் கதை வைரம்தான். நாவலின் தொடக்க காட்சியை வாசித்துவிட்டாலே உங்களால் அதனை கீழே வைக்கமுடியாது. இத்தனைக்கும் இது தெலுங்கில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல் ஒரு மொழிபெயர்ப்பு என்பதையே உங்களால் நினைவில் வைத்திருக்க முடியாது. அந்தளவு வேகம்.  நாவலின் முதல்காட்சியே காந்தி, மருந்துக்கடையை தேடுவதும். அவனது அவசரத்தை பயன்படுத்தி ஆட்டோக்காரர், மருந்துக்கடைக்காரர்  ஆகிய இருவரும் பணத்தை சுரண்ட நினைப்பதுதான். மருந்தை வாங்கிக்கொண்டு போயும் கூட அதற்கான பயன் இருக்காது. அவனது அம்மா இறந்துபோய்விடுவார். அப்போது காந்தி கேட்கும் கேள்வி, மனதை அறுக்க கூடியது. அவனைப் பார்க்கும் நர்ஸ் கூட சற்று கலங்கிப்போய்விடுவாள். எண்டமூரி வீரேந்திரநாத்தின் சிறப்பே எழுதும் எழுத்துகள் உங்களுக்கு அப்படியே மனக்கண்ணில் காட்சியாக ஓடுவதுதான். இதனால் நாவலை உணர்வுப்பூர்வமாக வாசிக்கத் தொடங்கிவிடுகிறோம்.  க

2019 டிரெண்டுகள் என்ன? பகுதி 1

படம்
giphy இன்புளூயன்சர்கள் இந்த வார்த்தையை அறிமுகம் செய்த து இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட சமூக வலைத்தளங்கள்தான். இம்முறையில் இவர்கள் நவீனமான விளம்பர தூதர்களாக செயல்பட்டு ஆச்சி இட்லி மிளகாய் பொடி முதல் கார்கள் வரை விளம்பரம் செய்து சம்பாதித்தார்கள். கவிதை நேசர்கள் இம்முறை இலக்கியவாதிகளின் கவிதைகளை தாண்டி சாமானியர்களும் கவிதை பாடினார்கள். இதில் சிம்பிளாக அவர்களின் உறவு, பிரச்னைகள் ஆகியவை கவிதையாக வெளிவந்தன. நன்றாக இருந்த தோ இல்லையோ உலகம் இதை ரசித்து பாராட்டியது. இதற்கு முக்கியக் காரணம், நகரங்களில் உருவாகியுள்ள கிளப்புகள்தான். இங்குதான் ஓபன் மைக் சங்கதிகளில் இந்த கவிதைகளைப் பாடி இளைஞர்கள் குதியாட்டம் போட்டனர். இவை உடனுக்குடன் வைரலும் ஆனது. மொபைலே தியேட்டர் இந்தியர்களுக்கு எம்எக்ஸ் பிளேயர் கிடைத்தது, அதிலும் நெட்ஃபிளிக்ஸ் படங்கள் மாதம் 199 ரூபாய்க்கு கிடைத்தால் போதாதா? வார இறுதியில் தங்கள் நண்பர்களை விட போனுடன் கழித்த நவீன இளைஞர்கள் அதிகம். பார்க்கிங், பாப்கார்ன் செலவு பற்றி கவலைப்படாமல் வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வசதி செய்து அமேசான், நெட்ஃபிளிக்சுக்கு படம் கட்ட

சூழலைக் காக்க குழந்தை வேண்டாம்! - புதிய தியாகிகள் உதயம்!

படம்
சுற்றுச்சூழலுக்காக சில தியாகங்களை பலரும் செய்வதுண்டு. ஒரு பொருளை வாங்கினால் மீண்டும் அதனைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலை பயன்படுத்துவது, ஆக்சிஜன் தரும் செடிகளை வளர்ப்பது உள்ளிட்டவை இந்த வகையில் சேரும். ஆனால் திருமணம் செய்தாலும் குழந்தை வேண்டாம். சூழலுக்கு பிரச்னை, வளரும் வாய்ப்பில்லை என தவிர்க்க முடியுமா? இப்படிப்பட்ட சிந்தனையும் ஒருபுறம் வளர்ந்துவருகிறது. அதை மற்றவர்கள் மறுக்கவும் முடியாது. தீவிரவாதம், பஞ்சம், குழந்தை கட்டுப்பாட்டு என நிலைமை மாறி வருகிறது. நிருபமா கொண்டய்யா, விபின் நாயர் அப்படிப்பட்ட தம்பதிகள்தான். எங்களுக்கு குழந்தை இல்லை என்று சொல்லி, அதற்கான காரணத்தை சொன்னால் உடனே விநோதமாக உறவினர்கள் பார்க்கிறார்கள். அதற்காக எங்களுக்கு உடல் பிரச்னை என்று கூறமுடியுமா? சரியான சூழல் இல்லை என்று தைரியமாக கூறி வருகிறோம் என்கிறார் நிருபமா. இது ஏதோ வின்சென்ட் காபோ போல புதுமைப்பித்து தலைக்கேறியவர்கள் உருவாக்கிய கருத்து என நினைத்து விடாதீர்கள். அமெரிக்காவில் அலெக்சாண்டிரியோ ஒக்காசியோ கார்டெஸ் என்ற அம்மணி, குழந்தை பெறாதீர்கள். சூழல் கெட்டுவிடும