சூழலைக் காக்க குழந்தை வேண்டாம்! - புதிய தியாகிகள் உதயம்!
சுற்றுச்சூழலுக்காக சில தியாகங்களை பலரும் செய்வதுண்டு. ஒரு பொருளை வாங்கினால் மீண்டும் அதனைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலை பயன்படுத்துவது, ஆக்சிஜன் தரும் செடிகளை வளர்ப்பது உள்ளிட்டவை இந்த வகையில் சேரும். ஆனால் திருமணம் செய்தாலும் குழந்தை வேண்டாம். சூழலுக்கு பிரச்னை, வளரும் வாய்ப்பில்லை என தவிர்க்க முடியுமா?
இப்படிப்பட்ட சிந்தனையும் ஒருபுறம் வளர்ந்துவருகிறது. அதை மற்றவர்கள் மறுக்கவும் முடியாது. தீவிரவாதம், பஞ்சம், குழந்தை கட்டுப்பாட்டு என நிலைமை மாறி வருகிறது. நிருபமா கொண்டய்யா, விபின் நாயர் அப்படிப்பட்ட தம்பதிகள்தான். எங்களுக்கு குழந்தை இல்லை என்று சொல்லி, அதற்கான காரணத்தை சொன்னால் உடனே விநோதமாக உறவினர்கள் பார்க்கிறார்கள். அதற்காக எங்களுக்கு உடல் பிரச்னை என்று கூறமுடியுமா? சரியான சூழல் இல்லை என்று தைரியமாக கூறி வருகிறோம் என்கிறார் நிருபமா.
இது ஏதோ வின்சென்ட் காபோ போல புதுமைப்பித்து தலைக்கேறியவர்கள் உருவாக்கிய கருத்து என நினைத்து விடாதீர்கள். அமெரிக்காவில் அலெக்சாண்டிரியோ ஒக்காசியோ கார்டெஸ் என்ற அம்மணி, குழந்தை பெறாதீர்கள். சூழல் கெட்டுவிடும் என பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு காரணமாக வெப்பமயமாதல், கடல்நீர்மட்டம் உயர்வு, மீத்தேன் வெளியேற்றம், உணவுப்பற்றாக்குறை என டஜன் காரணங்களை அடுக்கிறது சூழல் படை.
அமெரிக்காவில் கன்சீவபிள் ஃப்யூச்சர், இங்கிலாந்தில் பர்த் ஸ்ட்ரைக் ஆகிய அமைப்புகள் குழந்தைகளை பெறாதீர்கள், பூமி சூடாகிடும் என மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் ஊக்கம் பெற்றவர், இந்திராணி கஜ்ஜராபு.
உங்கள் குழந்தை நல்ல காற்றை சுவாசித்து வாழ்ந்தால் பரவாயில்லை. அப்படி நல்ல வாய்ப்புகள் கிடைக்காதபோது எதற்கு குழந்தை? அக்குழந்தையை ஏன் தேவையற்ற சவால்களை சந்திக்க வைக்கிறீர்கள் என்று கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை.
நான் இப்படி சொல்லுவதன் அர்த்தம், குழந்தை நீங்கள் பெறவே கூடாது என்பதல்ல. குழந்தை உள்ளவர்களை குற்றவாளிகளாக்கவும் இல்லை. இப்படி நாம் நிர்பந்தித்தால்தான் அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளை மாற்றுவார்கள். சுற்றுச்சூழலைக் காப்பாற்ற முடியும். என வேற லெவலில் யோசிக்கிறார் இந்திராணி.
இப்போதுள்ள மக்கள் தொகைக்கு நிறைய இயற்கை ஆதாரங்கள் தேவை. இந்நிலையில் புதிய குழந்தைகளுக்கு பதிலாக ஆதரவற்று உள்ள குழந்தைகளை த த்தெடுத்த வளர்க்கலாம். மேலும் இந்தியாவில் பெரியளவு மாசுபடுத்தல் கார்பன் வெளியீடு இல்லை எனவே நம்மை பெரிய நாடுகளுடன் ஒப்பிட்டு குற்ற உணர்வு கொள்ளவேண்டியதில்லை என டேக் இட் ஈஸியாக பேசுகிறார் எழுத்தாளர், தேசாந்திரி சிவ்யாநாத். இவர் ஷூட்டிங் ஸ்டார் என்ற நூலை எழுதியுள்ளார்.
அமெரிக்க மக்கள் சராசரியாக 16.9 டன்கள் கார்பனை வெளியிடுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. இந்த வகையில் ஒரு குழந்தை 58 டன்கள் கார்பனை குறைக்க முடியும் என்கிறது 2017 ஆய்வு. அமெரிக்க உளவியல் சங்கம் இதனை இயற்கை குறித்த பதற்றம் பெற்றோர்களிடம் ஏற்பட்டு வருகிறது. அதன் விளைவாக குழந்தை பெறாதீர்கள் என்பது போன்ற பிரசாரங்கள் எழுப்பபடுகின்றன என்று கூறுகிறது.
எனவே, உங்கள் முன்னோரின் சமாதி முன்பு குழந்தை வேண்டாம் என இப்போதே சபதம் செய்துவிடாதீர்கள். பொறுத்திருங்கள். உலகம் மாறும் வாய்ப்பு கூட உள்ளது.
தகவல்- டைம்ஸ் ஆப் இந்தியா
ஆங்கிலமூலம் - சோனம் ஜோஸி
மேலும் தகவல்களுக்கு - https://birthstrike.tumblr.com/
https://www.theguardian.com/lifeandstyle/2019/mar/12/birthstrikers-meet-the-women-who-refuse-to-have-children-until-climate-change-ends