ஏன்?எதற்கு?எப்படி? - ஐந்து கேள்விகள் - மிஸ்டர் ரோனி
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
ஒளியை விட வேகமாக பயணிக்கும் பொருள் உண்டா?
ஒளியின் வேகம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ. இதைவிட வேகமான பொருள் இதுவரை இல்லை. நாளை கண்டுபிடிக்கப்படலாம். காரணம், விண்வெளி தொடர்ந்து விரிவாகி வருகிறது. அப்படி விரிவாகும்போது, ஒளியின் வேகம் என்பது மிகச்சிறியதாகவே இருக்கும்.
அனைத்து பருவகாலங்களிலும் சில செடிகள் பசுமையாக இருப்பது எப்படி?
அதற்கு காரணம், அவற்றின் ஒளிச்சேர்க்கை முறையும், பருவகாலங்களுக்கு ஏற்றபடி மாறிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மைதான் காரணம். பொதுவாக செடிகள், மரங்கள் பனிக்காலத்தில் தம் இலைகளை உதிர்த்து விடும். தேவையில்லாமல் ஆற்றல் வெளியேறும் என்றுதான் இந்த ஏற்பாடு. பின்னர் வசந்தகாலத்தில் புதிய இலைகள் முளைக்கும். ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் செடிகள், ஒளிச்சேர்க்கையை குறைந்த வெப்பநிலையைப் பயன்படுத்தியும் செய்யும் தன்மை கொண்டவை.
கசப்பான உணவுகளை குழந்தைகள் புறக்கணிப்பது ஏன்?
குழந்தைகள் கீரைகள், பழங்கள் போன்றவற்றைத் தவிர்க்க முக்கியக் காரணம் மரபணுக்களிலேயே உள்ளது. முன்னோர்கள் அப்படித்தான் இருந்தனர். கண்டது, கடியது என சாப்பிட்டால் அந்த இடத்திலேயே சாக வேண்டியதுதான். எனவே, கசப்பான சுவை என்றால் விஷம் என்று புரிந்துகொண்டனர். எனவேதான் கசப்பு, துவர்ப்பான காய்கறிகள் இன்றும் குழந்தைகளுக்கு ம் ஹூம் என மறுத்து தள்ளிவிடக்காரணம்.
ஆக்சிஜனை அதிகம் சுவாசித்தால் என்னாகும்?
நேரடியாக கைலாசம்தான். ஆக்சிஜன் நிறைய ரத்த த்தில் கலந்தால் உள்ளிருக்கும் எலக்ட்ரான்களை ஃப்ரீ ரேடியல்களாக மாற்றும். இதன்விளைவாக மரணம் நேரும். எனவே, ஆக்சிஜன் அளவு உடலில் மிதமிஞ்சக்கூடாது.
மிளகாய் நம்மைக் கொல்லுமா?
வாய்ப்பிருக்கிறது. சாதாரணமாக ஊரில் உள்ள சீனி மிளகாய் தின்றாலே தலையைத் தட்டிவிட்டு அரைக்குடம் தண்ணீர் குடித்து என படாதபாடு படுகிறோம். மிளகாயிலுள்ள காப்சிகன் எனும் வேதிப்பொருள்தான் இதற்குக் காரணம். இது வாந்தி, காரம், வியர்வை ஆகிய உணர்வுகளை ஏற்படுத்துகிறது. உலகிலேயே கோஸ்ட் பெப்பர் என்ற மிளகாய்தான் அதிக காரம் கொண்டது.
நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் - மார்க் பிரையன்ட்