புகைத்தால் இறப்பு - சீனா வேபிங் பென்ஸ் காரணமா?



நிகோடின் கொண்ட இ சிகரெட்டுகள் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளன. இவை அங்கு 2007 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தன. இன்று பல லட்சம் பேர் இதனை அங்கு புகைத்து வருகின்றனர். இ சிகரெட்டுகளில் நிகோடின் திரவ வடிவில் இருக்கும். பேட்டரி மூலம் அந்த திரவம் மெல்ல புகையாகும். அது சிகரெட் புகைப்பது போன்ற உணர்வைத் தரும்.

தற்போது இ சிகரெட்டுகளைப் பிடிப்பவர்கள் நுரையீரல் பாதிப்புற்று இறந்து வருகின்றனர். விஸ்கான்சின், இலினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் ஐந்துபேர் இ சிகரெட் பிடித்து இறந்துள்ளனர். இதனால் அந்தந்த மாநில நிர்வாகங்கள் சிகரெட் பிடிக்காதீர்கள் என்று கூறியுள்ளது. 33 மாநிலங்களைச் சேர்ந்த 450 பேர் இசிகரெட்டால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இ சிகரெட்டில் நிகோடின், மரிஜூவானா, டிஹெச்சி, பூச்சிக்கொல்லி, நச்சு ஆகியவை காணப்பட்டுள்ளன. அரசு 140க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து சோதித்து வருகிறது. நிகோடினுடன் விட்டமின் இ அசிட்டேட் சேர்ந்துள்ளது ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. புரப்பலைன் கிளைக்கால் மற்றும் கிளிசரால் ஆகியவை விட்டமின் இ அசிட்டேட்டிற்கு அடுத்தபடியாக சந்தேகிக்கப்படுகின்றன.

கஞ்சா இலையில் உள்ள இயற்கையான வேதிப்பொருள்தான் விட்டமின் இ அசிட்டேன். அதனை வெப்பமுறச்செய்யும்போது, அதன் இயல்பு மாறுகிறது. காரணம், அதனுடன் சேர்ந்துள்ள பிற பகுதிகளின் காரணமாக கூட இருக்கலாம். கள்ளச்சந்தையில் விலை குறைந்த இ சிகரெட்டுகளிலும் கூட பல்வேறு வேதிப்பொருட்கள் பகுதிப்பொருட்களாக கலக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

அமெரிக்கா சீனப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளது. அதுவரையிலும் இ சிகரெட் கருவிகள், கார்ட்ரிட்ஜ், திரவங்கள் என பெரும்பாலான பொருட்களை சீனர்களே தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலுள்ள மாநிலங்களில் விரைவில் இசிகரெட் விதிமுறைகள் அமலுக்கு வரும் அறிகுறிகள் தெரிகின்றன.