மில்லினிய இளைஞர்கள் சமூகத்தை விட்டு விலகுகிறார்களா? -சோசியல் ஃபேட்டிக்!


Image result for social fatigue









டாக்டர் எக்ஸ்.

சோசியல் ஃபேட்டிக் (social fatigue) என்றால் என்ன?


நீங்கள் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்கிறீர்கள். உங்களுடன் வேலை செய்பவர்களுடன் நட்பாக இருக்கிறீர்கள். எதற்காக, வேலைக்காக. ஆனால் நெருங்கிய நட்பு என்பது இருபது பேர் இருந்தால் அதில் ஒருவரிடம் அமையலாம். அதுதான் சாத்தியம்.

இந்த வேலைகளை முடித்துவிட்டு, ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் பலரும் அந்த நாளில் சோஷியல் தளங்களைக் கூட ஆஃப் செய்து விட்டு அப்ஸ்காண்டாகி விடுகிறார்கள். எங்கு செல்கிறார்கள். எங்கும் செல்வதில்லை. அமைதியாக தூங்குகிறார்கள்.

அவர்களுக்குப் பிடித்த கிடார் இசைப்பது, சமைப்பது, கடிகாரம் பார்க்காமல் பெட்டில் படுத்தே கிடப்பது என செய்கிறார்கள். மில்லியனிய ஆட்கள் 24/7 நேரமும் இணையத்தில் இருந்தாலும், பிரச்னை என வரும்போது உதவி செய்வது அரிதாகவே இருக்கிறது. ஸ்விஸ் வங்கியில் போட்ட கருப்பு பணம் நம் கனரா வங்கிக்கணக்கில் நாளைக்குச் சேர்ந்துவிடும் போன்ற நம்பிக்கை. காரணம், கணினி மூலமே உருவாகும் நட்பு. கருத்து ரீதியான ஒற்றுமையை வளர்க்கிறதே ஒழிய நேரடியாக உதவும் தன்மையை அல்ல. விதிவிலக்காக ஒத்த கருத்துடையவர்கள் நட்பாகி, தொழில்முயற்சி, திருமணம் லெவலுக்கு செல்கிறார்கள். இது அளவில் மிகவும் குறைவே.

டிஜிட்டல் உலகம் தனிமனித விருப்பங்களை நிறைவேற்றுகிறது என்றால், நாளிறுதியில் அது வெறுமையை ஏற்படுத்துகிறது. எனவே, அதிலிருந்து சிறிது நேரம் தள்ளி இருக்கும்போது மற்ற விஷயங்களையும் கவனிக்க முடிகிறது. விடுமுறை நேரத்திலும் ஷாப்பிங், படம் என அலைவது இன்று குறைந்துவருகிறது. உள்ளூரிலேயே சுற்றுவது, வீட்டில் பெட்டை விட்டு எழாமல் இருப்பது. ஸ்விக்கியில் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அமேசான், நெட்ஃபிளிக்ஸில் படம் பார்ப்பது என மில்லினிய ஆட்கள் மாறி வருகிறார்கள்.

இது பலருக்கும் புரியாத புதிராகத்தான் இருக்கும்.


நன்றி: டைம்ஸ்