5ஜிக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்புமில்லை!
மினி பேட்டி!
டாக்டர் ராபர்ட் டேவிட் கிரைமெஸ், இயற்பியலாளர்
5 ஜி பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்கிறார்களே?
ஐ.நாவின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு கூறிய தகவல்களை வைத்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால் அது 2பி எனும் குறிப்பிட்ட ரேடியோ அலை சார்ந்தது. இந்த அலை புற்றுநோயை உண்டாகும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது.
ஸ்மார்ட் போன்கள் புற்றுநோய்கட்டிகளை மூளையில் உண்டாக்கும் என்பது உண்மையா?
உலக நாடுகளில் பயன்படுத்தும் அனைத்து போன்களும் குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இந்த போன்களில்தான் நாம் நெடுநேரம் நண்பர்களிடம் உறவுகளிடம் பேசி வருகிறோம். மேலும் இதில் பயன்படும் ரேடியோ அலைகள் உங்களை பாதிக்கும் அளவு அயனிகள் கொண்டவை அல்ல.
5ஜி அலைவரிசையில் டிரான்ஸ்மிட்டர்கள் அதிகம் பயன்படுகின்றன. இது ஆபத்தில்லையா?
ட்ரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு அதிகம் என்று கூற முடியாது. தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ளவே இதனைப் பயன்படுத்துகின்றனர்.
5 ஜி பற்றி மட்டும் ஏன் இத்தனை வதந்திகள் பரவுகின்றன?
பிற தொழில்நுட்ப வசதிகள் போன்றதல்ல 5ஜி. உலகில் பல்வேறு மாற்றங்களின்போது மக்களுக்கு பதற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக தடுப்பூசி, நீரில் ப்ளூரைடு கலப்பு ஆகியவற்றின்போதும் இதேபோல பல்வேறு வதந்திகள் பரவின.
தகவல்: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்