மனிதநேயத்தை மறைய வைக்கும் பேராசை! - எவரு - குற்றவாளி யார்?


Image result for evaru (2019)



எவரு - தெலுங்கு 

இயக்கம் - வெங்கட் ராம்ஜி

ஒளிப்பதிவு  - வம்சி பச்சிபுலுசு

இசை - ஸ்ரீசரண் பகலா


சமீரா என்ற தொழிலதிபரின் மனைவி, குன்னூர் ரிசார்ட் ஒன்றில் வல்லுறவு செய்யப்படுகிறார். வல்லுறவில் ஈடுபடுபவர் டிஎஸ்பியான அசோக் கிருஷ்ணா என்ற உயரதிகாரி. அவரை சமீரா, துப்பாக்கியால் சுட்டுக்கொல்கிறார். அதாவது தன்னைக் கற்பழித்தார், அதனைத் தடுக்கும் முயற்சியால் அவரைக் கொன்றேன் என்கிறார். ஊடகங்களில் தன்னை பாவமாக காட்டிக்கொள்கிறார். விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு உள்ளுக்குள் பதற்றம் அதிகரித்து வருகிறது. காரணம், வழக்கு நகரும் திகுதிகு வேகம்தான.

இதற்கிடையே போலீஸ்துறை தங்கள் மீதான களங்கத்தைப்போக்க ரத்னாகர் எனும் தனியார் வக்கீலை  நியமிக்கின்றனர். இதனால் தான் பாதிக்கப்படுவோமோ என சமீரா பயப்படுகிறார். அப்போது அவரைக் காப்பாற்ற, வருகிறார் விக்ரம் வாசுதேவ்.ஆம் லஞ்ச லாவண்யம் வாங்கி குற்றவாளிகளுக்கு உதவுபவர் இவர். இருபது லட்சம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சமீராவுக்கு உதவுகிறார். அரசு வழக்குரைஞரிடம்  எப்படி பேச வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும்போது வழக்கு தொடர்பான உண்மையைக் கண்டுபிடிக்கிறார். இறுதியில் எது உண்மை என்ற புள்ளிக்கு வருகையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத ட்விஸ்ட்டுகள்  நடக்கின்றன. என்ன அது என்று கேட்கிறீர்களா? சொல்ல மாட்டோம்.  அதுதான் படம். அதற்காகத்தான் எவரு படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். 

Image result for evaru (2019)



படத்தில் யார் வில்லன், கதை நாயகன் என கூறப்போவதில்லை. படத்தின் ஆன்மாவை அது கொன்றுவிடும். ஸ்பானிஷ் படமான இன்விசிபிள் கெஸ்ட்டை தழுவி பிரமாதமாக படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கட். முதல் படத்தை ரெஃபரென்ஸ் வைத்து செய்தாலும் அப்பூரி ரவியின் திரைக்கதை, வசனம் படத்தை தொய்வின்றி தாங்குகிறது.

ஸ்ரீசரணின் இசை படத்தில் வரும் குன்னூர், ஹைதராபாத் இடங்களுக்கு மர்மச்சாயத்தை மனக்கண்ணில் பூசுகிறது. பணத்திற்கான பேராசையில் மனிதநேயம் மெல்ல மறைவதை காட்சிபடுத்துகிற படம், இறுதிக்காட்சியில் நம் மனதில்


வெறுமையை படியImage result for evaru (2019) 
விடுகிறது. 



அதிவி சேஷூக்கு இது முக்கியமான படம். கேசுவலான நடிப்பில் பின்னியிருக்கிறார். ரெஜினா காசன்ட்ரா வெறும் கவர்ச்சிக்கான பொம்மையல்ல என சொல்லியடித்து நிரூபித்திருக்கிறார். கண்ணில் மின்னும் துவேஷத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வென்றிருக்கிறார். எவரு? என படம் முழுக்க அதிவி சேஷ் கேள்வி கேட்டபடி இருக்கிறார். அதைக் கண்டுபிடிப்பதுதான் கதை. இதே கதையை ஒட்டி இந்தியியில் பட்லா என்ற படம் வந்திருக்கிறது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் படத்தை பாருங்கள். வெங்கட் ராம்ஜி உங்களை ரசிக்க வைப்பார். அதற்கு நாங்கள் கேரண்டி.


கோமாளிமேடை டீம்





பிரபலமான இடுகைகள்