கேஸ்லைட் எனும் உளவியல் பதம் எப்படி உருவானது?
pixabay |
டாக்டர் எக்ஸ்.
ஏன், திரும்ப திரும்ப இதே தவறைச் செய்கிறார்? நான் முதலிலேயே சொன்னேன். நீ கேட்கவில்லை. இது நிச்சயம் உன்னுடைய தவறுதான். இதுபோன்ற பேச்சுகள் காதல், திருமணம் என இரண்டு கட்டங்களிலும் வருவது உண்டு.
இதன் தொடர்ச்சியாக உளவியல் ரீதியாக ஒருவரைக் குற்றம் சாட்டும் தன்மையை கேஸ்லைட்டிங் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த உளவியல் பிரச்னை, சர்வாதிகாரிகள், நார்சிஸ்டுகள் என பலரிடமும் ஆராய்ந்ததில் காணப்பட்டது. அதாவது, இயல்பாக நடக்கும் நிகழ்ச்சியை திரித்து மாயத்தோற்றமாக்கி காட்டுவது.
தம்பதிகளிடையே சிலர் தன் மனைவியை அல்லது கணவரைக் கூட அடிக்கடி குற்றம் சாட்டுவார்கள். அதாவது சரியான நேரத்திற்கு பஸ் வரவில்லை, நீ தான் லேட்டானதற்கு காரணம் என நீளும் விவாதங்கள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை.
கேஸ்லைட்டிங் ஆட்கள் திட்டமிட்டு குறை சொல்வதற்கான சூழலை உருவாக்கி மக்களை அல்லது தங்களது மனைவி, நட்பை சிக்கலுக்குள் சிக்க வைப்பார்கள். இதன்மூலம் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறது. ஆனால் பலருக்கும் இது மனநல பாதிப்பு என்றே தெரியாது. இதனை அறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம்.
வீட்டுக்குள் நடைபெறும் வன்முறையைக் கூட அப்படி அடிக்க, சப்பாத்திக்கட்டையை வீசி மண்டைப் பிளக்க அவள்தான் காரணம் என போராடுவார்கள். இவர்களின் முதலில் ஓகே என்று தோன்றினாலும் ஆராய்ந்து பார்த்தால், அது உலக மகா புளுகு மூட்டை என தெரியவரும்.
இந்த வார்த்தை எப்படி புழக்கத்திற்கு வந்தது என்றால், 1938 ஆம்ஆண்டு பேட்ரிக் ஹாமில்டன் எழுதி இயக்கிய கேஸ் லைட் என்ற நாடகத்ததிலிருந்துதான். இதில் மனைவியைக் கொல்லத் திட்டமிடும் கணவன், கேஸில் இயங்கும் விளக்குகளின் பிரகாசத்தை தினசரி மெல்ல குறைத்து வருவான். சந்தேகமடையும் மனைவி அதனைக் கேள்வி கேட்கும்போது, அப்படி இல்லையே என ஏமாற்றி மழுப்புவான்.
நன்றி: தாட்.கோ.