இடுகைகள்

கருணாநிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திராவிட இயக்கம், கட்சி ஆகியவற்றின் போராட்டம் நிறைந்த நெடிய சமூகநீதிப் பயணம்!

படம்
      தெற்கிலிருந்து ஒரு சூரியன் இந்து தமிழ்திசை ஆசிரியர் குழு - அசோகன், கே.கே மகேஷ், சமஸ், ரங்காச்சாரி, ஏஎஸ் பன்னீர்செல்வம் இந்து தமிழ்திசை, சென்னை திராவிட இயக்கத்தின் செயல்பாடு, திமுக அரசியல் அதிகாரம் பெற்று செய்த சாதனைகள், அதன் பிரச்னைகள், பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி என மூன்று தலைவர்களின் ஆளுமை, தமிழ்நாட்டின் தனித்துவம், திராவிட ஆட்சியில் நடைபெற்ற சமூகநீதி திட்டங்கள் என ஏராளமான தகவல்களைக் கொண்டதாக நூல் உருவாகியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படியான நூலை உருவாக்கியிருப்பது சமூகநீதிக்கு எதிராக இருந்த பார்ப்பன பத்திரிகைக் குழுமம் என்பதுதான். திராவிட இயக்கத்திற்கு ஆதரவாக நின்ற பத்திரிகைகளோ, பத்திரிகையாளர்களோ கூட இப்படியான நூலை தொகுக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. எதிர்க்குழுவோ, ஆதரவான குழுவோ திராவிட இயக்கம் சார்ந்து கருணாநிதி அவர்களை புத்தக அட்டையாக போட்டு நூல் ஒன்று தயாராகிவிட்டது. நூல் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம். நூல் தொடக்கத்தில் நீதிக்கட்சி, பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என பல்வேறு கட்டுரைகள் வழியாக தம...

தலைவராக அதிகரிக்கும் வரவேற்பு! - ஸ்டாலினோடு துணை நிற்கலாமா?

படம்
                      அதிமுகவும் , திமுகவும் ஜெயலலிதா , 2016 ஆம் ஆண்டு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றார் . இதன்மூலம் 32 ஆண்டுகளாக இருந்த சாதனையை தகர்த்தார் . ஒரே கட்சி இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியதுதான் அது . எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கி தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்தார் . அவர் 1987 இல் இறந்துபோனார் . அதற்குப்பிறகுதான் 1989 இல் திமுக வெற்றி பெறமுடிந்தது . 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது . ஆனாலும் கூட தமிழக முதல் அமைச்சராக வாய்ப்பளிக்கும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் திமுகவின் தலைவரான ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சைதான் . கட்சிக்காக கலைஞர் காலத்திலிருந்து களப்பணி ஆற்றிவரும் அவருக்கு முதல்வர் பதவி கிடைப்பது என்பது உழைப்பிற்கான பரிசாக அமையக்கூடும் . தற்போதைய முதல்வரான பழனிசாமியைப் பொறுத்தவரை முதல்வர் பதவி என்பது அதிர்ஷ்டவசமாக கிடைத்தது . ஆனால் கட்சி எம்எல்ஏக்களை கட்டிக்காப்பாற்றியதில் அவரது சாமர்த்தியம் உள்ளது . தவிக்கும் மதவாத சக்திகள் பாஜக கட்ச...