இடுகைகள்

பேஸ்புக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணாடி மூலமே வீடியோக்களை எடுக்க வழி செய்யும் பேஸ்புக் கண்ணாடி! - ஸ்டோரிஸ் கண்ணாடி

படம்
  கடந்த செப்டம்பர் 2021 அன்று பேஸ்புக்கும், ரேபான் நிறுவனமும் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் ஒன்றை அறிவித்தனர். இந்த கண்ணாடியை அணிந்து படம் எடுக்க, பாடல்களை பதிவு செய்ய, வீடியோக்களை எடுக்க பாடல்களை கேட்க முடியும்.  ஸ்டோரிஸ் என்ற கண்ணாடி வெளியானபோது, அதன் தகவல் பாதுகாப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள். பயனர்களின் விருப்பப்படி வீடியோக்களை படங்களை எடுக்கலாமா, இதனை கட்டுப்படுத்துவது யார், இதனை பிற சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்துவார்களா என நிறைய கேள்விகள் உருவாயின.  இந்த கண்ணாடியில் இரண்டு கேமராக்கள் இருக்கும். ஸ்பீக்கர்கள் இருக்கும். மூன்று மைக்குகளும் கூட. இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். ஹலோ பேஸ்புக் சடாரென வீடியோ எடு என்றால் கண்ணாடி இயங்கத் தொடங்கும். நன்றாக சார்ஜ் செய்த கண்ணாடி மூலம் 30 நொடி நீளமுள்ள 50 வீடியோக்களை எடுக்கலாம் என்று பேஸ்புக் கூறியுள்ளது.  இதில் எடுக்கும் படங்கள் ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை விட குறைந்த தரமே கொண்டவை. வீடியோக்களை எடுத்தபிறகு அதனை எடிட் செய்து பேஸ்புக்கில் போடலாம். மெட்டாவின் பிற கம்பெனி தளங்களிலும் பதிவு செய்யலாம். கண்ணாடியை ஸ்ட

மெய்நிகர்உலகத்திற்கு வரவேற்பு கொடுக்கும் மெட்டா! - பேஸ்புக்கின் எதிர்கால ஐடியா

படம்
  மெட்டா மெட்டாவெர்ஸ் கூகுளின் தாய் நிறுவனம் ஆல்பபெட். அதைப்போலவே பேஸ்புக்கின் கைவசம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்த நிறுவனத்திற்கு மெட்டா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை இப்போது மார்க் ஸூக்கர்பெர்க் ரீபிராண்டிங் செய்து வருகிறார். எதிர்காலத்திற்கான புது விஷயங்களை நம்பிக்கையுடன் செய்கிறோம் என்று மார்க் கூறியிருக்கிறார்.  மெட்டாவெர்ஸ் என்பது புதுமையான விர்ச்சுவல் உலகம். முதலில் கணினி, பிறகு இணையம் அதிலிருந்து ஸ்மார்ட்போன் என சென்றுகொண்டிருக்கும் பயணம் இதோடு நிற்காது புதுமையாக செல்லும் என்பதை தனது டெமோ வீடியோ மூலம் கூறியிருக்கிறார். மார்க் அவரது நண்பர்களை விர்ச்சுவல் ஸ்பேஸ் ஒன்றுக்கு அழைத்து விளையாடும் காட்சியை இணையத்தில் பார்த்திருக்கலாம். இதில் எப்படி தோன்றலாம் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். மக்கள் ஒருவரையொருவர் எப்படி சந்திக்கிறார்கள், இணைகிறார்கள் என்பதுதான் மெட்டாவெர்ஸ் என மார்க் நினைக்கிறார்.  இதில் ஒருவரின் முகத்தைப் பார்ப்பது மட்டுமன்றி, அவருடனான உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்ள முடியும். இதனை மார்க் மட்டுமே சாத்தியப்படுத்தமுடியும் என

பெயரை மாற்றிக்கொள்ள தயாராகும் பேஸ்புக்!- என்ன காரணம்?

படம்
  பெயரில்  என்ன இருக்கிறது? பொதுவாக அனைவரும் இப்படி சொல்லுவார்கள். ஆனால் பிராண்ட் பெயர்களைப் பொறுத்தவரை கவனமாக தேர்வு செய்யவேண்டும். இல்லையெனில் பெயர் மக்களின் மனதில் பதியாது. வணிகமே குப்புற விழுந்துவிடும்.  ஸோமாடோ இன்று இந்திதான் தேசிய மொழி என லொள்ளு பேசும் உணவு சேவை நிறுவனம். அதன் இயக்குநர் தமிழர்களுக்கு சமூக வலைத்தளம் வழியாக சகிப்புத்தன்மை பற்றி பாடம் நடத்தியதையும் நாம் பார்த்தோம். ஸோமாடோ, 2010இல் உருவானபோது அதன்பெயர் ஃபுடிபே என பெயர் வைக்கப்பட்டது. பிறகு இரண்டே ஆண்டுகளில் நிறுவனத்தின் பெயரை ஸோமாடோ என்ற பெயரை மாற்றி பிராண்டிங் செய்தனர். இப்போது வெற்றிகரமாக மக்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுக்குமளவு நிறுவனம் வளர்ந்திருக்கிறது.  நெட்பிளிக்ஸ் இன்று உலகமெங்கும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வளர்ந்து வரும் நிறுவனம். இதன் வேகத்திற்கு அமேசான், டிஸ்னி கூட ஈடு கொடுக்க முடியவில்லை. பாரம்பரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு நெட்பிளிக்ஸ் திரைப்பட விருதுகளையும் பெற்று வருகிறது. இதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிப்பி. துணை நிறுவனர் மார்க் ராண்டோல்ப் வேறு பொருத்தமான பெயர் கிடைக்கும் வரை இந்தப்

இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு அமெரிக்காவில் சென்று புகார் கொடுக்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத், ஐடி அமைச்சர்

படம்
                ரவிசங்கர் பிரசாத் , ஐடி அமைச்சர் சமூக வலைத்தளங்களை முறைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய உள்ளது . இதைப்பற்றி அமைச்சர் பேசினார் . மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்து சமூக வலைத்தள நிறுவனங்கள் நிற்க காரணம் என்ன ? இந்தியா ஜனநாயக நாடு . சமூக வலைத்தள நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து வருமானம் ஈட்டத்தான் வருகின்றன . அவர்கள் குடிமக்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறார்கள் என்பது உண்மைதான் . ஆனால் சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை கடைப்பிடித்துதான் ஆகவேண்டும் . நீங்கள் கூறுகிறபடி விதிகளை அமைத்தால் அரசை விமர்சிக்கும் குரலகளை கூட எளிதாக தணிக்கை செய்யமுடியுமே ? மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விதிகள் , சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கானவை அல்ல . அரசு , பிரதமரை விமர்சிக்கும் விமர்சனங்களை அனுமதிக்கிறோம் . ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வது , அதனை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை கட்டுப்படுத்த நினைக்கிறோம் . இளம்பெண்களை மார்பிங் செய்து புகைப்படங்கள

வாட்ஸ்அப் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை விலக்கிக்கொள்ளுமா?

படம்
          பாதுகாப்பு விதிகளுக்கு கெடு ! பேஸ்புக் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப் புதிய தகவல் கொள்கையை உருவாக்கியுள்ளது . இதனை பயனர்கள் ஏற்றுக்கொள்வதற்கு மே 15 ஆம் தேதியை கெடுவாக விதித்தது . இதற்கு பயந்து பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த இதனை ஏற்காதவர்களின் கணக்குகளை அழிக்கமாட்டோம் என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது . வாட்ஸ்அப் புதிய கொள்கையின்படி தனது தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்வதாக கூறியிருந்தது . வாட்ஸ்அப் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான டெலிகிராம் , சிக்னல் ஆகியவற்றை விட மக்களை கவர்ந்திருந்தது . இதற்கு காரணம் , எளிமைதான் . இதன் எளிமைத்தன்மையை டெலிகிராம் போன்ற எளிய ஆப்புடன் கூட ஒப்பிட முடியாது . டெலிகிராமை பலரும் படங்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தினால் வாட்ஸ்அப்பை குறுஞ்செய்தி அனுப்ப , அலுவலக வட்டாரச்செய்தி , அதில் பிறருக்கு அழைத்து பேச என பல்வேறு விஷயங்களை செய்யமுடியும் . இலவசமாக ஒரு ஆப்பை தருகிறார்கள் என்றாலே அதில் பயனர்களின் தகவல்களை எடுத்து தங்களது லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்றுதான் பொருள் . ஆனால் அதனை உள்ளது உள்ளபட

செய்தி இலவசமல்ல!

படம்
  அண்மையில் ஆஸ்திரேலியா, உள்நாட்டிலுள்ள செய்தி நிறுவனங்களைக் காப்பாற்ற புதிய சட்டங்களை உருவாக்கியது. இது அங்கு செய்திகளை மக்களுக்கு இலவசமாக கொடுத்து கோடிகளில் வியாபாரம் செய்த கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது. உடனே அவர்கள் நாங்கள் எங்கள் சேவையை வேறு நாடுகளுக்கு மாற்றிக்கொள்கிறோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.  இதனால் கூகுளும், ஃபேஸ்புக்கும் ஆஸ்திரேலியாவில் தங்களது சேவைகளை முதன்முறையாக பணம் கொடுத்து பெறவிருக்கின்றனர். கூகுள், பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பெற்று அதற்கேற்ப தகவல்களை அவருக்கு அனுப்பி வியாபாரம் செய்துவருகின்றனர். விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் இருந்தாலும் அதனை உருவாக்குபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் புகார் கொடுத்ததால் ஆஸ்திரேலிய அரசு சட்டங்களை மாற்றி அவர்களை காப்பாற்ற முனைந்துள்ளது.  மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசின் முடிவை ஏற்றுள்ளது. இந்த நிறுவனம் பிங் எனும் சர்ச் எஞ்சினையும், லிங்க்டு இன் தளத்தையும் நடத்தி வருகிறது. பிற நிறுவனங்கள் இதனை வரவேற்கவில்

வெறுப்பு பேச்சுகளை ஊக்கப்படுத்தும் சமூக வலைத்தளங்கள்! - வணிகத்திற்காக எல்லைமீறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் வழக்குகள்!

படம்
            சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் வெறுப்புவாதம் ! வெறுப்பு பேச்சுகளை ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களின் பேரில் ஃபேஸ்புக் , ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகின்றன . கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்க செனட் கமிட்டி முன் ஃபேஸ்புக் நிறுவனர் மா்ர்க் , டிவிட்டர் இயக்குநர் ஜேக் டோர்ஸி ஆகியோர் ஆஜராயினர் . அவர்களது நிறுவனத்தில் பகிரப்படும் வெறுப்புவாத செய்திகள் பற்றிய விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர் . பேச்சு சுதந்திரம் அல்லது வெறுப்பு வாதங்கள் என்று பகிரப்படும் செய்திகளால் நாட்டில் நடைபெறும் பதற்றமான நிகழ்ச்சிகள் காரணமாகவே மேற்கண்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்றது . அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் அரசியல் நிலை சீரற்றதாகி வருகின்றன . இந்தியாவில் நவம்பர் 21 அன்று கேரள அரசு , 118 ஏ என்ற சமூகவலைத்தள பதிவுகளுக்கா ன தடுப்புச்சட்டத்தை அமல்படுத்தியது . பெண்கள் , குழந்தைகள் இணையத்தில் கேலி , கிண்டல் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டம் என மாநில அரசு கூறியது . ஆனால்