அரசுக்கும், டெக் நிறுவனங்களுக்குமான மேலாதிக்க போட்டி!
அதிகாரப் பந்தயம் - அரசு, சமூக வலைத்தளங்களின் மேலாதிக்க மோதல் போக்கு! இணையத்தில் உள்ள பல்வேறு சமூக வலைத்தளங்கள் மீது நெருக்கடிகள் திணிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் குறுஞ்செய்தி நிறுவனத்தின் தலைவர் பாவெல் மீது குற்றச்சாட்டு பதிவாக, அவர் பிரான்சில் கைதானார். பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைத்தளம் நீதிமன்ற பிரதிநிதியை நியமிக்காத காரணத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெட்டா நிறுவனம், பைடன் ஹாரிஸ் ஆகியோரின் நிர்வாகத்தால் சமூக வலைத்தள தணிக்கையை செய்யுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது. டெலிகிராம் நிறுவனம், போதைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத பரிவர்த்தனைகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், ஆபாச வீடியோக்கள் பகிரல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. இதுபற்றிய தகவல்களை அரசு அமைப்புகளுக்கு தருவதில் டெலிகிராம் ஆர்வம் காட்டவில்லை. பிரேசில் நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி எக்ஸ் தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நீதிபதி டீ மோரஸ், எக்ஸ் தளம் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும் பிரதிநிதிகளை நீக்கியதால் இப்படியான தடை உத்தரவ...