ஐஸ்லாந்தின் திமிங்கில வேட்டை தடையால் உருவாகும் மாற்றம்!

 













திமிங்கில வேட்டைக்குத் தடை!

ஐஸ்லாந்து நாட்டின், ஃபேக்ஸாபிளோய் விரிகுடா பகுதி. இங்கு, படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றும்போதே வழிகாட்டி, திமிங்கில இறைச்சியை தவிருங்கள். அதனை பாதுகாக்க முயன்று வருகிறோம் என்று கூறிவிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் வணிகரீதியான திமிங்கில வேட்டையை நிறுத்தவேண்டும் என ஐஸ்லாந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 

 ஜப்பான் நாடு, சில ஆண்டுகளாக திமிங்கில வேட்டையை நிறுத்தி வைத்திருந்தது. பிறகு, 2019ஆம் ஆண்டு வணிகரீதியான திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்கியது. இதன் விளைவாக, ஐஸ்லாந்து நாட்டு திமிங்கில இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது. ஆனால் அரசின் மீன்வளத்துறைத்துறை அமைச்சர் ஸ்வாண்டிஸ் ஸ்வாவர்ஸ்டோட்டிர், ”திமிங்கிலப் பாதுகாப்பே முக்கியம். பொருளாதாரப் பயன் முக்கியமல்ல” என்று  நாளிதழில் எழுதியுள்ளார்.  இதெல்லாம் தாண்டி சூழல் அமைப்புகள், திமிங்கில வேட்டையைத் தடுக்க 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.  

ஐஸ்லாந்தில் , 1600 ஆம் ஆண்டிலிருந்தே திமிங்கில வேட்டை நடைமுறையில் உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஐஸ்லாந்தில் நுழைந்த அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள்  திமிங்கில வேட்டையை வணிக ரீதியாக அதிகரித்தன. 1985ஆம் ஆண்டு ஐஸ்லாந்து அரசு, திமிங்கில வேட்டையை தடை செய்து, 2006இல் மீண்டும் தடையை நீக்கிவிட்டது. தற்போதைய அரசு விதிமுறைப்படி, ஆண்டுதோறும் வணிகத்திற்காக 209 ஃபின் திமிங்கிலங்களைப் (Fin whales) பிடித்து ஜப்பானுக்கு அனுப்பலாம். உள்நாட்டு பயன்பாட்டிற்காக, 217 மின்கே திமிங்கிலங்களைப் (Minke whales,) பயன்படுத்தலாம். 

திமிங்கில வேட்டை தடைக்காக போராடியதில்  உலக விலங்குநல நிதியம் (IFAW), ஐஸ்வேல் (IceWhale) ஆகிய அமைப்புகளின் பங்கு அதிகம். இந்த அமைப்புகள், எங்களை சந்தியுங்கள், சாப்பிடாதீர்கள் (Meet us, don’t eat us) என்ற சுலோகனை உருவாக்கி மக்களிடையே பிரசாரம் செய்தன.  ஐஸ்லாந்து மக்களில் 2 சதவீதம் பேர்தான் திமிங்கில இறைச்சியை தி னசரி உணவாக உட்கொள்கிறார்கள் என்று  உலக விலங்குநல நிதியத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.  ஆனால் ஐஸ்லாந்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் திமிங்கில இறைச்சியை உண்ணுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை தோராயமாக 20 லட்சமாகும். 

2011ஆம் ஆண்டு தொடங்கி திமிங்கில பாதுகாப்பு அமைப்புகளின் வேட்டைக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றன. இதன் காரணமாக, ஐஸ்லாந்திலுள்ள 60க்கும் மேற்பட்ட  உணவகங்கள் திமிங்கில உணவுவகைகளை உணவுப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளன. ஐஸ்லாந்து நாட்டின் திமிங்கிலங்களைப்  பார்ப்பதற்கெனவே ஐந்தில் ஒரு சுற்றுலாப்பயணி  வருகை தருகிறார். சுற்றுலா மூலம் ஐஸ்லாந்து நாட்டு அரசிற்கு,  ஆண்டிற்கு, 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 


தி கார்டியன் வீக்லி 8 ஏப்ரல் 2022

meet us dont eat us nation loses its taste for whale meat

abby young powell

https://www.theguardian.com/environment/2022/mar/28/meet-us-dont-eat-us-how-iceland-is-turning-tourists-from-whale-eaters-to-whale-watchers

கருத்துகள்