கண்டுபிடிப்புகள் வழியாக புவியியலைக் கற்க வேண்டும்! - ஜோனியா பாபெர்

 










ஜோனியா பாபெர் 
1862-1955)

அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில், கிளார்க் கவுண்டியில் பிறந்த புவியியலாளர்.  மேல்நிலைப்பள்ளிப் படிப்பிற்காக, தொலைவில் உள்ள  எட்கர் கவுண்டியில் உள்ள பாரிஸ் எனுமிடத்திற்கு சென்றார்.  மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்த ஜோனியா, ஆசிரியர் பயிற்சியில் இணைந்தார்.  

1886-88 காலகட்டத்தில்,  தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றினார். பிறகு,  குக் கவுண்டி நார்மல் ஸ்கூலில் (தற்போதைய சிகாகோ ஸ்டேட் பல்கலைக்கழகம்) , ஆசிரியராக கிடைத்த பணிவாய்ப்பை ஏற்றார். 1890 - 1899 காலகட்டத்தில் அங்கேயே  புவியியல் துறை தலைவராக உயர்ந்தார். ஜோனியா பாபெர், புவியியலின் பல்வேறு பிரிவுகளை (Meteorology, Mathematical Geography) மாணவர்களுக்குக் கற்றுத் தந்தார். 

மாணவர்கள் புவியியல் சார்ந்து புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும், அதன் வழியாக பாடங்களைக் கற்க வேண்டும் என ஜோனியா விரும்பினார்.  1896இல் புவியியல் மாணவர்களுக்கான தனித்துவ மேசையை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1898ஆம் ஆண்டு ஜோனியா துணை நிறுவனராக இருந்து புவியியல் சங்கத்தைத் தொடங்கினார். 50 ஆண்டுகள் இதன் தலைவராகச் செயல்பட்டார். 

https://blogs.scientificamerican.com/rosetta-stones/4-fantastic-pioneering-earth-scientists-for-international-womens-day/

https://www.geni.com/people/Prof-Zonia-Baber/6000000042380522159

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்